AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND W vs PAK W: பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்.. வைரலாகும் வீடியோ!

Harmanpreet Kaur: கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின்போது, ​​டாஸுக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவுடன் கைகுலுக்க ஹர்மன்பிரீத் கவுர் மறுத்துவிட்டார். போட்டிக்கு ஒரு நாள் முன்பு, கைகுலுக்கக் கூடாது என்ற கொள்கை குறித்துப் பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர் மறுத்துவிட்டார்.

IND W vs PAK W: பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்.. வைரலாகும் வீடியோ!
ஹர்மன்ப்ரீத் கவுர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Jun 2026 21:29 PM IST

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு (IND W vs PAK W) இடையேயான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2026 (ICC Womens World Cup 2026) போட்டி இன்று அதாவது 2026 ஜூன் 14ம் தேதி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். ஆனால் எதிர்பார்த்தபடியே, டாஸுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுர் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவுடன் கைகுலுக்கவில்லை. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு 2026 ஆசிய கோப்பை மற்றும் 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த முதல் நபர் சூர்யகுமார் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு மகளிர் அணியும் அதே கொள்கையைப் பின்பற்றி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்து வருகிறது.

ALSO READ: செய்தியாளர் சந்திப்பின்போது வந்த போன் கால்.. தாமதிக்காமல் நிதிஷ் ரெட்டி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!

2 முறையும் கைகுலுக்க மறுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்:


கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின்போது, ​​டாஸுக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவுடன் கைகுலுக்க ஹர்மன்பிரீத் கவுர் மறுத்துவிட்டார். போட்டிக்கு ஒரு நாள் முன்பு, கைகுலுக்கக் கூடாது என்ற கொள்கை குறித்துப் பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர் மறுத்துவிட்டார். டாஸுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுர், “பிட்ச் நன்றாகத் தெரிகிறது. அதனால் நாங்கள் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.

பாகிஸ்தான் அணிக்கு 171 ரன்கள் இலக்கு:

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 44 பந்துகளில் 68 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 35 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர். இறுதியில், ரிச்சா கோஷ் 17 பந்துகளில் 5 பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் அடித்தார். அவர் 34 ரன்கள் எடுத்து, இந்திய அணியை 160 ரன்களைக் கடக்கச் செய்தார். தீப்தி ஷர்மா 9 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் சார்பில் சாடியா இக்பால் மற்றும் கேப்டன் பாத்திமா சனா தலா 2 விக்கெட்டுகளையும், தஸ்மியா ருபாப் மற்றும் ரமீன் ஷமீம் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ALSO READ: மீண்டும் ரோஹித் சர்மாவை ரன் அவுட்டாகிய கில்.. ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?

இந்திய மகளிர் அணியின் பிளேயிங் லெவன்:

ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், பார்தி ஃபுல்மாலி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுர், ஸ்ரீ சரணி, ஸ்ரேயங்கா பாட்டீல்.

பாகிஸ்தான் மகளிர் அணியின் பிளேயிங் லெவன்:

முனீபா அலி (விக்கெட் கீப்பர்), குல் பெரோசா, ஆயிஷா ஜாபர், சாய்ரா ஜபீன், நடாலியா பர்வேஸ், அலியா ரியாஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், நஷ்ரா சந்து, சாடியா இக்பால், தஸ்மியா ரூபாப்.

Follow Us