AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND W vs PAK W: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கல் இருக்குமா..? எழுந்த கேள்வி! ஹர்மன்ப்ரீத் கவுர் நச் பதில்..!

IND vs PAK Handshake: கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற 2025 ஆண்கள் ஆசியக் கோப்பை முதல் இந்திய ஆண்கள் மற்றும் இந்திய மகளிர் அணியினர் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்குவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றி வருகின்றனர். 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையிலும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இதையே பின்பற்றியது.

IND W vs PAK W: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கல் இருக்குமா..? எழுந்த கேள்வி! ஹர்மன்ப்ரீத் கவுர் நச் பதில்..!
இந்தியா - பாகிஸ்தான் கைகுலுக்கல் சர்ச்சை
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Jun 2026 15:36 PM IST

2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் (ICC Womens T20 World Cup 2026) இன்று அதாவது 2026 ஜூன் 14ம் தேதி இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் (IND W vs PAK W) பர்மிங்காமில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. இந்த போட்டியின் டாஸின்போது இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்குமா என்ற கேள்விக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அளித்த பதில் வைரலாகி வருகிறது. 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுக்கும். இந்தப் பெரிய போட்டிக்கு முன்பு, இந்திய அணி பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்குமா என்று ஹர்மன்பிரீத்திடம் கேட்கப்பட்டபோது, ​​தாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாடவே வந்துள்ளோம் என்று தெளிவாகப் பதிலளித்தார்.

கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற 2025 ஆண்கள் ஆசியக் கோப்பை முதல் இந்திய ஆண்கள் மற்றும் இந்திய மகளிர் அணியினர் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்குவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றி வருகின்றனர். 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையிலும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இதையே பின்பற்றியது.

ALSO READ: பரபரப்பின் உச்சம்.. இன்று மோதும் IND W vs PAK W.. பிட்ச் எப்படி..?

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் கைகுலுக்கல் நடைபெறுமா?


பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், “நாங்கள் இங்கு உலகக் கோப்பையில் விளையாடவே வந்திருக்கிறோம், கைகுலுக்கிக்கொள்ள அல்ல. எங்கள் முழு கவனமும் ஆட்டத்தின் மீதும், போட்டியில் வெற்றி பெறுவதன் மீதும் மட்டுமே உள்ளது. கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே பேசுவோம். கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்தத் தலைப்பைப் பற்றியும் நாங்கள் பேச மாட்டோம். நானும் கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்தத் தலைப்பைப் பற்றியும் சிந்திக்கவில்லை. முதல் நாளிலிருந்தே கிரிக்கெட் விளையாடுவதுதான் தனது கனவு.பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை மற்ற போட்டிகளைப் போலவே கருதுகிறேன் ” என்றார்.

ALSO READ: மகளிர் கிரிக்கெட்.. பல கோடி ரூபாய் பரிசுத் தொகை.. ஐசிசி எடுத்த முக்கிய முடிவு!

இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்படுமா?

இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் அழுத்தம் குறித்தும் பேசினார் அதில்,”இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்கும்போதெல்லாம் அழுத்தம் இருப்பது இயல்புதான். இந்திய அணி இந்தப் போட்டியை மற்ற போட்டிகளைப் போலவே அணுகி, தங்களின் 100 சதவீத உழைப்பைக் கொடுக்க முயற்சிக்கும். 2025 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தற்போதைய நோக்கம், டி20 உலகக் கோப்பையில் இந்தியக் கொடியை ஏற்றுவதே ஆகும்” என்றார்.

Follow Us