IND W vs PAK W: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியே ஆதிக்கம்.. நேருக்கு நேர் மோதலில் பாகிஸ்தான் நிலைமை என்ன?
INDW vs PAK W Head to Head: இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் களமிறங்குவதற்கு முன்பு, புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வரலாற்று ரீதியாக யார் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். இந்த இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் இதுவரையிலான சாதனைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் (2026 ICC Womens T20 World Cup) இன்று அதாவது 2026 ஜூன் 14ம் தேதி பர்மிங்காம் நகரிலுள்ள எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் தொடங்கும். இந்திய அணி (Indian Womens Cricket Team) இடம்பெற்றுள்ள குரூப்பில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற வலுவான அணிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்திய அணி தங்களது உலகக் கோப்பை பயணம் கடினமாகவே இருக்கும். இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் களமிறங்குவதற்கு முன்பு, புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வரலாற்று ரீதியாக யார் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். இந்த இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் இதுவரையிலான சாதனைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: பரபரப்பின் உச்சம்.. இன்று மோதும் IND W vs PAK W.. பிட்ச் எப்படி..?
யாருக்கு கை ஓங்கியுள்ளது?
மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில், இந்தியாவும் பாகிஸ்தானும் 16 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 13 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. மகளிர் டி20 உலகக் கோப்பையில், இந்த இரு அணிகளும் 8 முறை சந்தித்துள்ளன. இங்கும், இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி, 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தான் 2 முறை மட்டுமே வென்றுள்ளது.




பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி கடைசியாக 2022-ல் இதே வடிவத்தில் இந்திய அணியைத் தோற்கடித்தது. இந்த மகளிர் ஆசியக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் அணி இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன் பிறகு, இந்திய அணி தொடர்ந்து 3 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்துள்ளது.
ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு வாட்ச்மேனின் கோரிக்கை!
டி20 உலகக் கோப்பைக்கான இரு அணிகளின் முழு விவரம்:
இந்திய அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பார்தி ஃபுல்மாலி, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சரணி, யாஸ்திகா பாட்டியா, நந்தனி சர்மா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், க்ரந்தி யா கௌட், ஷாரேயங்கா கவுட்
பாகிஸ்தான் அணி:
பாத்திமா சனா (கேப்டன்), குல் பெரோசா, ஆயிஷா ஜாபர், இராம் ஜாவேத், அய்மான் பாத்திமா, அலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், சாய்ரா ஜபீன், முனீபா அலி, துபா ஹசன், ரமீன் ஷமிம், சாடியா இக்பால், நஷ்ரா சந்து, டயானா ரூப், தாஸ்மியா