IND vs AFG 1st ODI: செய்தியாளர் சந்திப்பின்போது வந்த போன் கால்.. தாமதிக்காமல் நிதிஷ் ரெட்டி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!
Nitish Kumar Reddy Press Conference: ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய வந்தபோது, ரஹ்மானுல்லா குர்பாஸ் வெறும் 48 பந்துகளில் சதம் அடித்து வரலாறு படைத்தார். 16வது ஓவரில் நிதிஷ் ரெட்டி, ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குர்பாஸை க்ளீன் போல்ட் ஆனார்.
இந்தியா – ஆப்கானிஸ்தான் (IND vs AFG) இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியில் நிதிஷ்குமார் ரெட்டியும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கியப் பங்காற்றினார். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பின்போது நிதிஷ்குமார் ரெட்டியின் செயல்பாடுகள் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளன. உண்மையில், இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிதிஷ் ரெட்டி கலந்துகொண்டபோது, அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பும் வந்தது. அது யார்..? அப்போது என்ன நடந்தது என்பதே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ALSO READ: சுப்மன் கில் ரன் வேட்டை.. தர்மசாலாவில் வெற்றியை தடம் பதித்த இந்தியா!




ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டி தான் வீசிய ஓவர்களில் 31 ரன்களுக்கு 2 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்தார். மேலும், சதம் அடித்த ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் அனுபவ ஆல்-ரவுண்டர் முகமது நபி ஆகியோரின் விக்கெட்டுகளையும் நிதிஷ்குமார் ரெட்டி கைப்பற்றினார்.
செய்தியாளர் சந்திப்பின் நடுவில் வந்த போன் கால்:
Nitish Kumar Reddy’s mother calls him when he was attending Press Conference. 😄❤️ pic.twitter.com/fwyoE8z7va
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 13, 2026
நிதிஷ்குமார் ரெட்டி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு அவரது தாயிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அந்தச் சந்திப்பின்போது, 5 நிமிடங்களில் பேசுவதாகத் தன் தாயிடம் நிதிஷ்குமார் ரெட்டி கூறினார். இந்தச் சம்பவத்திற்காக நிதிஷ்குமார் ரெட்டி செய்தியாளர்களிடம் மன்னிப்புக் கோரினார். பிசிசிஐ இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
தரம்சாலாவில் மழையால் பாதிக்கப்பட்டு நடைபெற்ற இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் போட்டியில், ஓவர்களின் எண்ணிக்கை 25 ஆகக் குறைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய வந்தபோது, ரஹ்மானுல்லா குர்பாஸ் வெறும் 48 பந்துகளில் சதம் அடித்து வரலாறு படைத்தார். 16வது ஓவரில் நிதிஷ் ரெட்டி, ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குர்பாஸை க்ளீன் போல்ட் ஆனார்.
குர்பாஸ் விக்கெட்:
Yorker…and BOWLED \|/
There’s the breakthrough courtesy of Nitish Kumar Reddy 💪
Updates ▶️ https://t.co/lCuohEZYAl #TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank | @NKReddy07 pic.twitter.com/QjkdPjrasb
— BCCI (@BCCI) June 13, 2026
ALSO READ: 48 பந்துகளில் சதம்.. மிரட்டிய குர்பாஸ்.. இந்திய அணிக்கு 195 ரன்கள் மட்டுமே இலக்கு!
ஐபிஎல் 2026 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ்குமார் ரெட்டி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் தனது அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்தார். ஐபிஎல் 2026 சீசனில், நிதிஷ்குமார் ரெட்டி பேட்டிங்கில் 302 ரன்களும், பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளும் எடுத்தார்.