IND vs AFG: இந்திய அணிக்காக களம் கண்ட அறிமுக வீரர்கள்.. முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்தல்!
Indian Cricket Team: இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடுவது இதுவே முதல் முறை. தர்மசாலாவில் முதல் போட்டி மதியம் 1:30 மணிக்குத் தொடங்குவதாகவும், டாஸ் மதியம் 1 மணிக்கு நடப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் தொடர் மழை காரணமாகப் போட்டி தாமதமானது.
ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு பிறகு, இந்தியா – ஆப்கானிஸ்தான் (IND vs AFG) இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று அதாவது 2026 ஜூன் 13ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணிக்காக குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் தங்களது சர்வதேச அறிமுகப் போட்டியில் விளையாடுகின்றனர். ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இருவரும் முதன்முறையாக இந்திய அணிக்கு (Indian Cricket Team) அழைக்கப்பட்ட நிலையில், ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலேயே ஆடும் லெவனில் இடம்பிடித்தனர். இதுமட்டுமின்றி, குர்னூர் பிரார் தனது முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி அசத்தல் அறிமுகத்தை நிகழ்த்தினார்.
ALSO READ: மழையால் தடைப்படும் IND vs AFG ஒருநாள் போட்டி.. 20 ஓவர்களாக நடத்தப்படுமா?




இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடுவது இதுவே முதல் முறை. தர்மசாலாவில் முதல் போட்டி மதியம் 1:30 மணிக்குத் தொடங்குவதாகவும், டாஸ் மதியம் 1 மணிக்கு நடப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் தொடர் மழை காரணமாகப் போட்டி தாமதமானது. மாலை 5:15 மணிக்கு டாஸ் நடைபெற்றதில், முதலில் பந்துவீசவதாக இந்திய கேப்டன் சுப்மன் கில் அறிவித்தார். அந்தவகையில், இந்தப் போட்டியில் அறிமுக வீரர்களான குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே பற்றி தெரிந்து கொள்வோம்.
யார் இந்த ஹர்ஷ் துபே..?
ஹர்ஷ் துபே 2002 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி மகாராஷ்டிராவின் புனேவில் பிறந்தார். 23 வயதான ஹர்ஷ் துபே விதர்பா அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுகிறார். இவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை பந்துவீச்சாளரும் ஆவார். சமீபத்தில், நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி, 8 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேநேரத்தில், கடந்த 2026ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி, 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
ஹர்ஷ் துபே லிஸ்ட் ஏ சாதனையை பொறுத்தவரை 30 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும் 296 ரன்களும், டி20 போட்டிகளில் 38 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அதிக உயரம் கொண்ட குர்னூர் பிரார்:
The stuff dreams are made of 🌟
🎥 Gurnoor Brar strikes in his very first over in international cricket ☝️
Updates ▶️ https://t.co/lCuohEZYAl #TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/x7qIkDWPZr
— BCCI (@BCCI) June 13, 2026
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், குர்னூர் பிராருக்கு அவரது அறிமுக கேப் வழங்கினார். 26 வயதான பிரார் பஞ்சாபைச் சேர்ந்தவர். இவர் 2000-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி முக்த்சரில் பிறந்தார். அவர் தனது உயரத்தால் நல்ல வேகத்தில் பந்துவீசக்கூடிய ஒரு வேகப்பந்து வீச்சாளராக தெரிகிறார். 6 அடி 5 அங்குல உயரம் என்பதால், பிரார் இஷாந்த் ஷர்மாவை விட உயரமானவர்.
ALSO READ: இந்திய அண்டர் 19 அணியில் இடம்.. அடுத்த மாதம் இலங்கை பறக்கும் டிராவிட் மகன்!
குர்னூர் பிரார் 2023-ல் தனது ஒரேயொரு ஐபிஎல் போட்டியில் விளையாடினார். இருப்பினும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 3 ஓவர்கள் பந்து வீசியும், விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. முந்தைய ஐபிஎல் 2026 சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் பிரார் இடம்பெற்றிருந்தார். ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் பிரார் பெஞ்சில் அமர்ந்திருந்தாலும், தனது முதல் ஓவரிலேயே இப்ராஹிம் ஜத்ரானை ஆட்டமிழக்கச் செய்து, ஒரு சிறப்பான சர்வதேச அறிமுகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.