IND U19 vs SL U19: இந்திய அண்டர் 19 அணியில் இடம்.. அடுத்த மாதம் இலங்கை பறக்கும் டிராவிட் மகன்!
Anvay Dravid: இந்தியாவும் இலங்கையும் முறையே 2026 ஜூலை 4, 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும். இந்த 3 ஒருநாள் போட்டிகளும் ஹம்பாந்தோட்டாவில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, 2026 ஜூலை 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலி மற்றும் கொழும்பில் 4 நாள் போட்டிகள் நடைபெறும்.
இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகின்ற 2026 ஜூலை மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய 19 வயதுக்குட்பட்டோர் இளையோர் அணி (IND vs SL) இன்று அதாவது 2026 ஜூன் 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்திய 19 வயதுக்குட்பட்டோர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரு அணிக்கும் யஷ்வர்தன் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், லக்ஷ்யா ராய்ச்சந்தானி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் இளைய மகனான அன்வே, ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அன்வே விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக விளையாடுவார். அதன்படி, அன்வே மற்றும் ரஜத் பாகேல் ஆகியோர் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.




கடந்த 2025 டிசம்பரில் கர்நாடக அணிக்காக ‘விஜய் மெர்ச்சன்ட் டிராபி’யில் தனது முதல் சதத்தை அன்வே டிராவிட் அடித்தார். ‘வினூ மன்கட் டிராபி’யில் கர்நாடக அணியை காலிறுதி வரை வழிநடத்திய அன்வே, 6 போட்டிகளில் மொத்தம் 220 ரன்கள் குவித்தார். இதில் இமாச்சலப் பிரதேசத்திற்கு எதிரான 236 ரன்கள் இலக்கை எட்ட ஆட்டமிழக்காமல் அன்வே, 93 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் குவித்தார். அன்வே மூத்த சகோதரர் சமித் டிராவிட் முன்னதாக ஆஸ்திரேலியாவுடனான தொடருக்கு U19 அணியில் அழைக்கப்பட்டிருந்தாலும், காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. இதை தொடர்ந்து அன்வேவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
போட்டிகள் எங்கு நடைபெறும்?
🚨 News 🚨
India Men’s U19 squads for Sri Lanka series announced.
More Details 🔽https://t.co/tGJ7FRywxK
— BCCI (@BCCI) June 11, 2026
இந்தியாவும் இலங்கையும் முறையே 2026 ஜூலை 4, 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும். இந்த 3 ஒருநாள் போட்டிகளும் ஹம்பாந்தோட்டாவில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, 2026 ஜூலை 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலி மற்றும் கொழும்பில் 4 நாள் போட்டிகள் நடைபெறும்.
இலங்கை சுற்றுப்பயணத்தின் முழு அட்டவணை
- ஜூலை 4, 2026 – முதல் ஒருநாள் போட்டி, ஹம்பாந்தோட்டா
- ஜூலை 6, 2026 – 2வது ஒருநாள் போட்டி, அம்பாந்தோட்டை
- ஜூலை 9, 2026 – 3வது ஒருநாள் போட்டி, அம்பாந்தோட்டை
- ஜூலை 13-16, 2026 – முதல் 4 நாள் போட்டி, காலி
- ஜூலை 20-23, 2026 – 2வது 4 நாள் போட்டி, கொழும்பு.
இந்திய 19 வயதுக்குட்பட்ட ஒருநாள் அணி
சாகர் விர்க், லக்ஷ்யா ராய்ச்சந்தனி (துணை கேப்டன்), யாஷ்பர்தன் சிங் சவுகான் (கேப்டன்), வினீத் வி கே, அர்ஜுன் ராஜ்புத், குஷாக்ரா ஓஜா, ரஜத் பாகேல் (விக்கெட் கீப்பர்), அன்வாய் டிராவிட் (விக்கெட் கீப்பர்), அன்மோல்ஜீத் சிங், வுத்குரி யாஷ்வீர் கவுட், ரோஹித் அனில் யாதவ், ஷவின் வி, காவ்யா பரேஷ் படேல், மோஹித் உல்வா, இஷான் சூட்.
இந்திய 19 வயதுக்குட்பட்ட டெஸ்ட் அணி
சாகர் விர்க், லக்ஷ்யா ராய்ச்சந்தனி (துணை கேப்டன்), யாஷ்பர்தன் சிங் சௌஹான் (கேப்டன்), படேல் குஷ், மனல் சௌஹான், குஷாக்ரா ஓஜா, மானவ் கிருஷ்ணா (விக்கெட் கீப்பர்), ஆர்யன் சந்தேஷ் சாக்பால் (விக்கெட் கீப்பர்), ஹேம்சுதேஷன் ஜே, பி.கே. கிஷோர், ரோஹித் அனில் யாதவ், காவ்யா பரேஷ் படேல், பிரியன்ஷு சிங், பிரணவ் ராகவேந்திரா, சிகுருபதி வெங்கடா.