IND W vs PAK W: பாகிஸ்தானை வீழ்த்தியதும் குவிந்த சாதனைகள்.. இந்திய அணி படைத்த 8 ரெக்கார்ட்ஸ்!
INDW vs PAKW Records: 2025 ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியா, தனது டி20 உலகக் கோப்பை பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது. மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 7 முக்கிய சாதனை படைக்கப்பட்டது. அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் (ICC Womens T20 World Cup 2026) இந்திய மகளிர் அணி 7வது முறையாக பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது. நேற்று அதாவது 2026 ஜூன் 14ம் தேதி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெற்ற 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி (Indian Womens Cricket Team) தற்போது 7-2 என தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ALSO READ: பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்.. வைரலாகும் வீடியோ!
பர்மிங்காமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஸ்மிருதி மந்தனா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தின் காரணமாக இந்திய அணி 170 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணி முழுவதும் 17 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், 2025 ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியனான இந்தியா, தனது டி20 உலகக் கோப்பை பயணத்தை வெற்றியுடன் தொடங்கியது. மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியா மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 7 முக்கிய சாதனை படைக்கப்பட்டது. அதை பற்றி விரிவாக பார்ப்போம்.




உலகக் கோப்பையில் அதிக அரைசதங்கள்
டி20 உலகக் கோப்பையில் அதிக அரைசதங்கள் அடித்த மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோரின் சாதனையை ஸ்மிருதி மந்தனா சமன் செய்துள்ளார். உலகக் கோப்பையில் இதுவரை மிதாலி, ஹர்மன்பிரீத் மற்றும் ஸ்மிருதி ஆகியோர் தலா 5 அரைசதங்களை அடித்துள்ளனர்.
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் (இந்தியர்)
மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்துள்ளார். ஹர்மன்ப்ரீத் கவுர் தற்போது 762 ரன்களுடன், முன்னாள் இந்திய அணியின் கேப்டனாக மிதாலி ராஜின் (726) சாதனையை முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் ஸ்மிருதி மந்தனா 592 ரன்களுடன் 3வது இடத்தில் உள்ளார்.
உலகக் கோப்பையில் ரிச்சா கோஷின் மிகப்பெரிய இன்னிங்ஸ்
டி20 உலகக் கோப்பை போட்டியில் 6-வது அல்லது அதற்கும் குறைவான வரிசையில் களமிறங்கிய ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச இன்னிங்ஸ் ரன்களுக்கான சாதனையை ரிச்சா கோஷ் தன்வசம் வைத்துள்ளார். ரிச்சா கோஷ் பாகிஸ்தானுக்கு எதிராக 17 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார்.
இந்திய அணி அதிகபட்ச ஸ்கோர்:
பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 170 ரன்கள் எடுத்தது. இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய மகளிர் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இருப்பினும், டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 194 ஆகும். இதை இந்திய அணி கடந்த 2018ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக எடுத்தனர்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள்:
மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை தீப்தி சர்மா படைத்துள்ளார். தற்போது தீப்தி சர்மா டி20 போட்டிகளில் 166 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு அணிக்கு எதிரான அதிக வெற்றிகள்
மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற 7வது வெற்றி இதுவாகும். ஒரே அணிக்கு எதிராக அதிக முறை தோற்கடித்த அணிகளின் பட்டியலில் இந்திய அணி தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை 8 முறை தோற்கடித்த ஆஸ்திரேலியா, தற்போது முதலிடத்தில் உள்ளது.
தீப்தி சர்மா சாதனை:
மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஆவார். பிரியங்கா ராய், ஜுலான் கோஸ்வாமி மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் தலா ஒரு முறை இவ்வாறு செய்துள்ளனர்.
ALSO READ: முதலிடத்தில் அடைக்கலமான ஆஸ்திரேலியா.. இந்திய மகளிர் எத்தனையாவது இடம்..? புள்ளிகள் பட்டியல் விவரம்!
அதிக விக்கெட் சாதனையை நெருங்கும் தீப்தி
மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற சாதனையை இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி 355 விக்கெட்டுகளுடன் தன்வசம் வைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி ஷர்மா, தற்போது 351 விக்கெட்டுகளுடன் அவரது சாதனையை இன்னும் நெருங்கியுள்ளார்.