IND W vs PAK W: பாகிஸ்தானை பதம் பார்த்த இந்திய பவுலர்கள்.. டி20 WCல் வெற்றியுடன் தொடங்கிய ஹர்மன் படை!
IND W vs PAK W Highlights: 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று அதாவது 2026 ஜூன் 14ம் தேதி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இலக்கை துரத்திய பாகிஸ்தான் மகளிர் அணி 17 ஓவர்களில் 106 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் (ICC Womens T20 World Cup 2026) இந்தியாவும் பாகிஸ்தானும் (IND W vs PAK W) இன்று அதாவது 2026 ஜூன் 14ம் தேதி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இலக்கை துரத்திய பாகிஸ்தான் மகளிர் அணி 17 ஓவர்களில் 106 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியாவின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 44 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடினார். 18 ஓவர்களுக்குப் பிறகு இந்தியாவின் ஸ்கோர் 132 ரன்களாக மட்டுமே இருந்தபோதிலும், கடைசி 2 ஓவர்களில் மட்டுமே இந்திய அணி 38 ரன்களை விரட்டியது. இதில், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 17 பந்துகளில் 34 ரன்கள் குவித்து அபாரமாக விளையாடினார். இதன் காரணமாக, இந்திய அணி 170 ரன்களை தொட்டது.
ALSO READ: பாகிஸ்தான் மகளிர் அணி கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்.. வைரலாகும் வீடியோ!




பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சாடியா இக்பால் மற்றும் கேப்டன் பாத்திமா சனா தலா 2 விக்கெட்டுகளையும், தஸ்மியா ருபாப் மற்றும் ரமீன் ஷமீம் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
171 ரன்கள் இலக்கு:
What. A. Finish 🥳
3️⃣ wickets in an over and Deepti Sharma has a superb 𝙁𝙄𝙁𝙀𝙍 🖐️#TeamIndia wrap a dominant 6️⃣4️⃣-run victory to kickoff our #T20WorldCup campaign 👏
Scorecard ▶️ https://t.co/1tfRc3jcrX#WomenInBlue | #T20WorldCup pic.twitter.com/vhvCoE9tXu
— BCCI Women (@BCCIWomen) June 14, 2026
இந்தியாவின் 171 ரன்கள் என்ற இலக்கிற்குப் பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் ஆறு ஓவர்களில் 52 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஒரு சிறப்பான தொடக்கத்தை அளித்திருந்தனர். ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக பவர்பிளேயில் பாகிஸ்தான் இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்தது இதுவே முதல் முறையாகும். இருப்பினும், 7வது ஓவரிலிருந்து, இந்தியப் பந்துவீச்சாளர்கள் எந்தத் தவறும் செய்யாமல், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணற செய்தனர்.
ஒரு கட்டத்தில் 75/3 என இருந்த பாகிஸ்தானின் ஸ்கோர், தற்போது 79/6 என மாறியுள்ளது. 13வது ஓவரின் முதல் பந்தில், ஸ்ரீ சரணி பாகிஸ்தானின் 8வது விக்கெட்டான நடாலியா பெர்வேஸை ஆட்டமிழக்கச் செய்தார். பாகிஸ்தான் நான்கு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் பாத்திமா சனா, ஷஃபாலி வர்மாவால் ஆட்டமிழந்து தனது கணக்கை தொடங்காமல் டக் அவுட்டாகி வெளியேறினர். தொடர்ந்து, 3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்களுடன் 8 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து, பாகிஸ்தான் அணியின் 17வது ஓவரில் பந்துவீச தீப்தி சர்மா வந்தார். தனது 4வது மற்றும் கடைசி ஓவரை வீசிய தீப்தி சர்மா வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இதன்மூலம், பாகிஸ்தான் அணி 104 ரன்களுக்குள் சுருள, இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீப்தி 4 ஓவர்களில் வெறும் 10 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.