IND A vs AFG-A: முத்தரப்பு தொடர் பைனலில் இந்தியா ஏ.. வெளியேறியதா ஆப்கானிஸ்தான் ஏ?
IND A in Tri Series Final: இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணி 4 புள்ளிகளையும், +0.797 என்ற நிகர ரன் ரேட்டையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியா ஏ இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாம் இடத்தில் உள்ள இலங்கையும் 4 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், குறைந்த நிகர ரன் விகிதம் காரணமாக இந்தியாவை விடக் கீழ்நிலையில் உள்ளது.
இலங்கையில் இன்று அதாவது 2026 ஜூன் 17ம் தேதி நடைபெற்ற முத்தரப்பு தொடரின் 5வது போட்டியில் திலக் வர்மா தலைமையிலான இந்தியா ‘ஏ’ அணி, ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை (IND A vs AFG A) 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ‘ஏ’ அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, சேஸிங்கில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் அணி, 36.5 ஓவர்களில் 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றியின் மூலம், தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் தங்களது நம்பிக்கையை இந்திய அணி (India A Team) தக்கவைத்துக் கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் திலக் வர்மா, 5 பவுண்டரிகளுடன் 75 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். பிரியான்ஷ் ஆர்யா மற்றும் குமார் குஷாக்ரா ஆகியோரும் தலா 58 ரன்கள் எடுத்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அடித்து, 28 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார்.




ALSO READ: வயது மாற்றத்தால் 2 ஆண்டுகள் தடை.. தளறாத மனம்.. இந்திய அணிக்கு அறிமுகமான பிரின்ஸ் யாதவ் பாதை!
வைபவ் இதுவரை இந்தத் தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. வைபவ் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில், முறையே 14, 44, 21 மற்றும் 38 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நான்கு போட்டிகளில் அவரால் வெறும் 117 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது.
இலக்கை விரட்ட தவறிய ஆப்கானிஸ்தான்:
INTO THE FINALS 👏
India A clinch a magnificent 1️⃣0️⃣1️⃣-run win over Afghanistan A to book their spot in the finals of the #TriNationSeries 💙
Scorecard ▶️ https://t.co/Kg9IWt7M5b#INDAvAFGA pic.twitter.com/kZ6YL4ngod
— BCCI (@BCCI) June 17, 2026
இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி செயலற்று காணப்பட்டது. பஹிர் ஷா 52 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரின் உதவியுடன் 57 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இருப்பினும், ஆப்கானிஸ்தானின் 4 பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்களை எட்டத் தவறினர், அவ்வாறு எட்டியவர்களும் அதை பெரிய ஸ்கோர்களாக மாற்றத் தவறினர். இதற்கிடையில், நிஷாந்த் சிந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தார். யாஷ் தாக்கூர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அனுகுல் ராய், சூர்யான்ஷ் ஷெட்ஜ், விப்ராஜ் நிகம் மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறியதா இந்திய ஏ அணி..?
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணி 4 புள்ளிகளையும், +0.797 என்ற நிகர ரன் ரேட்டையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியா ஏ இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாம் இடத்தில் உள்ள இலங்கையும் 4 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், குறைந்த நிகர ரன் விகிதம் காரணமாக இந்தியாவை விடக் கீழ்நிலையில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. இந்திய அணி நான்கு லீக் போட்டிகளிலும் விளையாடியுள்ளது.
ALSO READ: கில் – இஷான் அதிரடி சதம்.. ஆப்கானிஸ்தானுக்கு அணிக்கு 403 ரன்கள் இலக்கு!
இலங்கையும் ஆப்கானிஸ்தானும் தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. அவை தங்களின் இறுதி லீக் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடும். இந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால், இறுதிப் போட்டி இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையே நடைபெறும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், 3 அணிகளும் தலா 4 புள்ளிகளைப் பெற்றிருக்கும். இந்த நிலையில், சிறந்த நிகர ரன் ரேட்டை கொண்ட முதல் 2 அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டியில் விளையாடும்.