AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கோவையில் கிணற்றில் வந்த துர்நாற்றம்.. போலீஸூக்கு கிடைத்த சடலம்!

கோவையில் கிணற்றில் வந்த துர்நாற்றம்.. போலீஸூக்கு கிடைத்த சடலம்!

Sekaran S
Sekaran S | Published: 17 Jun 2026 20:12 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் கோபி ராசிபுரம் பகுதியில் செயல்படாத தொழிற்சாலை ஒன்று உள்ளது. தற்போது அந்த தொழிற்சாலையை திருமண மண்டபமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக கூறி அங்குள்ள பொதுமக்கள் அது குறித்து சிறுமுகை போலீசாருக்கும் அன்னூர் தீயணைப்பு துறை வீரர்களுக்கும் தகவல் கிடைத்தது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் கோபி ராசிபுரம் பகுதியில் செயல்படாத தொழிற்சாலை ஒன்று உள்ளது. தற்போது அந்த தொழிற்சாலையை திருமண மண்டபமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக கூறி அங்குள்ள பொதுமக்கள் அது குறித்து சிறுமுகை போலீசாருக்கும் அன்னூர் தீயணைப்பு துறை வீரர்களுக்கும் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போலீசார் முன்னிலையில் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பார்த்த போது அந்த கிணற்றில் சாக்கு மூட்டை ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசியது தெரியவந்தது.

இதனையடுத்து சாக்கு பையை கயிறு கட்டி வெளியே எடுத்து வந்து பார்த்த போது அதில் பெண் சடலம் ஒன்று கை கால் கட்டப்பட்ட நிலையிலும் அந்த சடலத்துடன் கல் ஒன்றை கட்டி வீசி இருந்தது தெரியவந்தது. அப்போது, உடனடியாக அந்த சடலத்தை மீட்ட சிறுமுகை போலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து புலன் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Follow Us