ஊருக்குள் புகுந்த மான்.. வனத்துறையினர் வீசிய வலையில் சிக்காமல் தப்பி ஓட்டம்..
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியால், உணவு மற்றும் தண்ணீர் தேடி புள்ளிமான் ஒன்று ஊருக்குள் புகுந்தது. தெருநாய்கள் துரத்தியதால் அச்சமடைந்த மான், மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் உள்ள முன்னாள் நீதிமன்ற வளாக கட்டிடத்தில் தஞ்சமடைந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் அதை வலை மூலம் பிடிக்க முயன்றனர். ஆனால் வலையில் சிக்காமல் தப்பித்த மான், அருகிலிருந்த கட்டிடத்தின் மீது தாவி, பின்னர் வாகனப் போக்குவரத்துக்கு இடையே சென்று மீண்டும் வனப்பகுதிக்குள் நுழைந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Follow Us
