விலை வீழ்ச்சியால் சாலைகளில் கொட்டப்படும் மாங்காய்கள்.. கிருஷ்ணகிரி விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாங்காய் கிலோவுக்கு ரூ.12 நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், வியாபாரிகள் ரூ.3 மட்டுமே வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பறிப்புக் கூலி மற்றும் போக்குவரத்துச் செலவுகூட கிடைக்காத நிலையில், விவசாயிகள் டன் கணக்கிலான மாங்காய்களை சாலை ஓரங்களில் கொட்டிவிட்டு செல்கின்றனர். சாலைகளில் மாங்காய்கள் அழுகி தேங்கி வருகின்றன. ஆண்டு முழுவதும் உழைத்தும் நஷ்டம் மட்டுமே ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் மா சாகுபடியை கைவிட்டு மாற்றுப் பயிர்களுக்கு மாற வேண்டிய சூழல் உருவாகும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Follow Us
