ஈரான் – அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை ரத்து.. காரணம் என்ன?
America - Iran Peace Talk Cancelled | ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இன்று சுவிட்சர்லாந்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட இருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், தற்போது இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன், ஜூன் 19 : அமெரிக்கா மற்றும் ஈரான் (America And Iran) இடையே இன்று அதிராகப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் – அமெரிக்கா இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பிப்ரவரி 28, 2026 முதல் கடும் மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வந்தது. ஈரான் – அமெரிக்கா பிரச்னை இரு நாடுகளுக்கு இடையேயானது மட்டுமன்றி, அது சர்சதேச அளவில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கியது. இந்த நிலையில் தான் ஜூன் 15, 2026 அன்று இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த சிக்கல் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இதையும் படிங்க : ஜி-7 மாநாடு.. இந்திய மாலுமிகளின் மரணம் குறித்து பேசிய பிரதமர் மோடி!
இதன் இடையே இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 60 நாட்கள் காலக்கெடுவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், 60 நாட்களுக்கு பிறகு இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி மோதலை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து முடிவு எடுப்பதாக இருந்தது. இதற்காக சுவிட்சர்லாந்தில் இருதரப்பும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தது.
இதையும் படிங்க : ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் சந்திப்பு.. இந்தியா-அமெரிக்க உறவை மீட்டெடுக்கும் முயற்சி
பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் தான், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறுவதாக இருந்த அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் சுவிட்சர்லாந்து பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவுக்கும் மோதல் நீடித்து வருவதன் காரணமாக அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை ரத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.