AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் சந்திப்பு.. இந்தியா-அமெரிக்க உறவை மீட்டெடுக்கும் முயற்சி..

சமீப காலமாக இந்தியா-அமெரிக்க உறவில் சில விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. அமெரிக்கா இந்தியாவுக்கு கூடுதல் வரிகள் விதித்தது, இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தாம் தலையிட்டு சமரசம் செய்ததாக டிரம்ப் கூறியது போன்றவை உறவை பாதித்தன. இதை இந்தியா மறுத்து, போர் நிறுத்தம் இரு நாடுகளின் நேரடி பேச்சுவார்த்தையின் விளைவாகவே ஏற்பட்டது என தெரிவித்தது.

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் சந்திப்பு.. இந்தியா-அமெரிக்க உறவை மீட்டெடுக்கும் முயற்சி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Jun 2026 07:07 AM IST

ஜூன் 16, 2026: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரான்சின் எவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 16 மாதங்களுக்கு பிறகு இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு இருவரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்திருந்தனர்.

பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் சந்திப்பு:

இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் கை குலுக்கி குறுகிய நேரம் உரையாடினர். இன்று நடைபெறவுள்ள இருதரப்பு சந்திப்பில் இந்தியா-அமெரிக்க உறவுகள், வர்த்தக ஒப்பந்தங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக் குடியரசின் உயரிய தேசிய விருது – மேலும் ஒரு கௌரவம்!

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். உலகளாவிய பொருளாதாரம், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் சர்வதேச சவால்கள் குறித்து உலக தலைவர்களுடன் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா – அமெரிக்கா உறவு:

சமீப காலமாக இந்தியா-அமெரிக்க உறவில் சில விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. அமெரிக்கா இந்தியாவுக்கு கூடுதல் வரிகள் விதித்தது, இந்தியா-பாகிஸ்தான் மோதலில் தாம் தலையிட்டு சமரசம் செய்ததாக டிரம்ப் கூறியது போன்றவை உறவை பாதித்தன. இதை இந்தியா மறுத்து, போர் நிறுத்தம் இரு நாடுகளின் நேரடி பேச்சுவார்த்தையின் விளைவாகவே ஏற்பட்டது என தெரிவித்தது.

மேலும், அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கை மற்றும் H1B விசா கட்டண உயர்வும் இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ இந்தியா வந்த பிறகு உறவை மீண்டும் சீரமைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.

இதற்கிடையில், ஓமன் கடற்கரைக்கு அருகே அமெரிக்க ராணுவ தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவமும் புதிய பதற்றத்தை உருவாக்கியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜி7 மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடல் மார்க்கங்களின் பாதுகாப்பும் மாலுமிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இரு தரப்பு சந்திப்பில் நடக்கும் முக்கிய விஷயங்கள்:

இன்று நடைபெறும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் சந்திப்பில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு கூட்டாண்மை, மேற்காசியா பிரச்சினை மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி7 மாநாட்டின் ஒரு பகுதியாக “அனைவருக்கும் சமநிலையான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி” என்ற அமர்விலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பான மற்றும் விரைவான பயன்பாடு குறித்த கலந்துரையாடலிலும் அவர் கலந்து கொள்கிறார்.

Follow Us