AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மேகதாது அணை திட்டம் தமிழகத்துக்கே அதிக நன்மை தரும்… கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

Mekedatu Dam Benefits : காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது கர்நாடகத்தை விட தமிழ்நாட்டுக்கே அதிக பயன் உள்ளதாக இருக்கும் என்று அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் டி. கே. சிவக்குமார் தெரிவித்தார். மேலும், பல காரணங்களை குறிப்பிட்டார்.

மேகதாது அணை திட்டம் தமிழகத்துக்கே அதிக நன்மை தரும்… கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 18 Jun 2026 17:15 PM IST

கர்நாடக மாநிலம், மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு அந்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு பல்வேறு கட்ட எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பெங்களூருவில் அந்த மாநிலத்தின் முதல்வர் டி. கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது. மேகதாது திட்டம் என்பது எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது மட்டும் இன்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் முக்கியமானதாகும். மேகதாது அணை திட்டம் கர்நாடகா மாநிலத்தை விட, தமிழகத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விட நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழகத்துக்கான 177.25 டிஎம்சி தண்ணீரை வெளியிடுவதற்கு கடமைப்பட்டுள்ளோம். இந்த திட்டத்தில் இருந்து ஒரு டிஎம்சி தண்ணீரை கூட பாசனத்துக்கு பயன்படுத்த முடியாது.

காவிரி ஆற்று நீர் மட்டுமே நீராதாரமாகும்

இதன் முதன்மையான நோக்கம் மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே ஆகும். ஒரு வாளி தண்ணீரை கூட பாசனத்திற்காக பயன்படுத்த முடியாது. இதில், குறிப்பாக பெங்களூருவில் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது. கிருஷ்ணா நதியில் இருந்து நாம் தண்ணீர் கொண்டு வர முடியாது. காவிரி ஆறு மட்டுமே ஒரே நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நீர் தேக்கத்தினால் தான் நாம் தண்ணீரை மிகவும் திறம்பட சேமித்து நிர்வாகித்து உபயோகிக்க முடியும். தமிழகத்தில் மேகதாது அணை விவகாரத்தை ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஆகவே முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தீயணைப்புத்துறை ஆணைய தலைவர் சங்கர் ஜிவால் திடீர் ராஜினாமா.. மேலும் 5 அதிகாரிகள் பணி விலகல்.. என்ன காரணம்!

மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்துக்கு அதிக பயன்

கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக தமிழக அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற அரசியலில் நான் தலையிட விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. இது கர்நாடக மாநிலத்தை விட தமிழ்நாட்டுக்கு மிக அதிகமாக உதவும் திட்டம் என்று தெரிவித்துள்ளார். பெங்களூருவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது.

மேகதாது அணை திட்டத்துக்கு தமிழகம் எதிர்ப்பு ஏன்

இதன் காரணமாக, காவிரி ஆறு, அர்க்காவதி ஆறு இணையும் மேகதாது பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு விவசாயம் மேற்கொள்வதற்கான போதிய நீர் ஆதாரம் கிடைப்பதில் மிகப்பெரிய தடை ஏற்படும். இதனால், விவசாயம் பெரிதளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதற்காகவே தமிழக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும் படிக்க: பெரம்பூர் டூ திருச்சி கிழக்கு… முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் 4 பேர் வழக்கு!

Follow Us