பெற்ற மகளுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. ஆட்டோ ஓட்டுநரான தந்தை அதிரடி கைது.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!
Puducherry Crime : புதுச்சேரி மாநிலத்தில் பெற்ற மகளை 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரான தந்தையை ஓதியஞ்சாலை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவரது மனைவி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 14 வயதில் ஒரு மகளும், 8 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், மனைவி வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் தனது 14 வயது மகளுக்கு அவரது தந்தையான ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனது தந்தையை கண்டித்ததாக தெரிகிறது. ஆனால், இந்த விஷயத்தை தாயிடமோ அல்லது வேறு யாரிடமும் கூறினால் உன்னையும், உனது தாயையும் கொலை செய்து விடுவதாக ஆட்டோ ஓட்டுநர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அச்சம் அடைந்த அந்த சிறுமி இது தொடர்பாக யாரிடமும் தெரிவிக்காமல் மனதிலேயே வைத்துள்ளார்.
மகளை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை
இந்த நிலையில், வழக்கம்போல சம்பவத்தன்று அதை சிறுவியின் தாய் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மகளிடம் அவரது தந்தை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர், வெளியே சென்றிருந்த செவிலியரான அவரது தாய் வீடு திரும்பிய நிலையில், சிறுமி சோகமாக இருந்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த தாய் அந்த சிறுமியிடம் எதற்காக சோகமாக இருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அப்போது, மிகவும் மன வருத்தத்தில் இருந்த அந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அப்பா தன்னை மிரட்டி தினமும் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: நெல்லை மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிரடியாக களமிறங்கிய சிங்கப்பெண்கள் படை!




சிறுமிக்கு சிகிச்சை- காவல் நிலையத்தில் புகார்
இதை கேட்டு, இந்த சிறுமியின் தாய் கடும் அதிர்ச்சியில் உறைந்தார். தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர், இது தொடர்பாக, சிறுமியின் தாய் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர்.
5 ஆண்டுகளாக மகளை வன்கொடுமை செய்த அதிர்ச்சி
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது. அதில், கடந்த 5 ஆண்டுகளாக மூத்த மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும், 8 வயதான 2- ஆவது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
மேலும் படிக்க: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தப்பிய மாணவி.. குரூப் 1 தேர்வில் சாதனை.. விரைவில் துணை ஆட்சியராக பதவியேற்கிறார்!