AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தீராத சொத்து தகராறு.. சேரன்மகாதேவியில் தம்பியின் சொகுசு காருக்கு தீ வைப்பு.. அண்ணன் அதிரடி கைது!

Nellai Crime: திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவியில் சொத்து பிரிப்பது தொடர்பான தகராறில் தம்பியின் காரை தீ வைத்து எரித்த சம்பவத்தில் தொடர்புடையதாக அவரது அண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீராத சொத்து தகராறு.. சேரன்மகாதேவியில் தம்பியின் சொகுசு காருக்கு தீ வைப்பு.. அண்ணன் அதிரடி கைது!
சொத்து தகராறில் காருக்கு தீ வைப்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 18 Jun 2026 15:42 PM IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கணான்குளத்தை சேர்ந்தவர் முத்து. இவர், சொந்தமாக கார் வைத்திருந்தார். மேலும், வாடகை கார்களில் ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், முத்து தனது சொந்த காரை நேற்று புதன்கிழமை இரவு தனது வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்கு சென்றார். சிறிது நேரத்தில், அவரது கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அறிந்த முத்து அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து தீயை அணைக்க முயன்றார். முடியாத காரணத்தால் சேரன்மகாதேவி தீயணைப்பு மற்றும் மீட்பு படைகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் முத்து புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளனர்.

தம்பியின் காரை தீ வைத்து எரித்த அண்ணன்

இதில், முத்துவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அவரது அண்ணன் பாபநாச பெருமாள் என்பவர் காருக்கு தீ வைத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், முத்துவுக்கும், பாபநாச பெருமாள் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. முத்துவுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பாபநாசம் செங்கல் சூளை அமைத்து நடத்தி வந்துள்ளார்.

மேலும் படிக்க: த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம்.. ஆளுநர் உரை முதல் எதிர்க்கட்சிகளின் அனல் பறக்கும் கேள்விகள் வரை.. நடக்கப்போவது என்ன?

சொத்து விவகாரத்தில் வெடித்த தகராறு

அந்த இடத்தையும், சொத்தையும் பலமுறை முத்து தனது அண்ணன் பாபநாச பெருமாள் இடம் பிரித்து தருமாறு கேட்டு வந்ததாக தெரிகிறது. இதற்கு, பாபநாச பெருமாள் சொத்தை பிரித்து தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக முத்து தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பாபநாச பெருமாளிடம், முத்துவின் உறவினர்கள் சொத்தை பிரித்து கேட்பதற்காக பேச்சுவார்த்தை நடத்த வருவதாக கூறியிருந்தனராம்.

காருக்கு தீ வைத்த நபரை கைது செய்த போலீஸ்

இதனால், ஆத்திரம் அடைந்த பாபநாச பெருமாள் சம்பவத்தன்று இரவு முத்துவின் வீட்டுக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது விலை உயர்ந்த கார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது தெரிய வந்தது. தொடர்ந்து பாபநாச பெருமாளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: முதல்வர் விஜய் பிறந்தநாள்.. வண்டலூர் உயிரியல் பூங்கா உட்பட 3 பூங்காவில் மக்களுக்கு 2 நாள் இலவச அனுமதி.. எப்போது?

Follow Us