ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை… தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த்!
Premalatha Vijayakanth : தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் மாநில பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆற்றிய உரை ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்ததாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார் .
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று வியாழக்கிழமை ஆளுநர் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்பட்டு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரைக்கு பின்னரும் 2- ஆவது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது. இந்த நிலையில், ஆளுநர் உரை தொடர்பாக எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அந்த கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அந்த வகையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வைத்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக ஆளுநரின் உரை ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசு தரப்புக்கு ஆதரவாக இருந்தது. 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டதையும் நாம் வரவேற்போம். இதில் தவறு எதுவும் இல்லை. ஆட்சியாளர்களுக்கு தகுந்தவாறு அனைத்தையும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்த ஆளுநர் உரை
தமிழகத்தில் நிகழும் பிரச்சனைகள் தொடர்பாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளும் தமிழக வெற்றிக்கழக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் உரை இருந்தது. அரசின் திட்டங்கள், மக்கள் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை ஆளும் அரசுக்கு ஆதரவாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஆளும் தரப்புக்கு ஆதரவாகவே ஆளுநரின் உரை இருந்தது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழக சட்டப்பேரவையில் இருக்கைகள் ஒதுக்கீடு.. முதலிடத்தில் உதயநிதி ஸ்டாலின்.. 5வது இடத்தில் இபிஎஸ்!




தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பேரவை கூட்டம்
கடந்த மே 10- ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்ற மறுநாள் முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டப்பட்டு எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி ஏற்றனர். இதைத்தொடர்ந்து, மே 13- ஆம் தேதி தவெக அரசின் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று விஜய் அரசு பெரும்பான்மையின் நிரூபித்து இருந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் விரைவில் கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
39 நிமிடங்கள் வாசித்த ஆளுநர் உரை
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் ஜூன் 18- ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதாக தெரிவித்து இருந்தார். இதற்காக, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இதில், ஆளுநர் அர்லேகர் 39 நிமிடங்கள் உரை நிகழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழக சட்டப்பேரவையில் 4 ஆண்டுகளுக்குப் பின் நடந்த மாற்றம்.. பொறுப்பு ஆளுநர் அர்லேகர் புதிய சாதனை!