AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர்..

முன்னதாக, “தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுமா?” என்ற கேள்வி எழுந்திருந்தது. ஏனெனில், கடந்த ஆட்சியில் தமிழக ஆளுநர் தேசிய கீதத்திற்கு முக்கியத்துவம் அளித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இதற்கு முன்னர் பதவி வகித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே நிறுத்திய சம்பவங்களும் நடந்திருந்தன.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Jun 2026 10:24 AM IST

ஜூன் 18, 2026: தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அதனைத் தொடர்ந்து, மே 13ஆம் தேதி முதலமைச்சர் விஜய் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் அவருக்கு ஆதரவாக 144 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். பெரும்பான்மையை நிரூபித்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

இந்த நிலையில், இன்று முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. முதல் கூட்டத்தொடர் என்பதன் காரணமாக ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது.

முன்னதாக, “தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுமா?” என்ற கேள்வி எழுந்திருந்தது. ஏனெனில், கடந்த ஆட்சியில் தமிழக ஆளுநர் தேசிய கீதத்திற்கு முக்கியத்துவம் அளித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இதற்கு முன்னர் பதவி வகித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே நிறுத்திய சம்பவங்களும் நடந்திருந்தன.

மேலும் படிக்க: “வாயை திறங்க CM”.. கறுப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றம் வந்த திமுக எம்எல்ஏக்கள்.. முதல்வருக்கு எதிராக கோஷம்!!

இந்தச் சூழலில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்றைய கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.

பதவியேற்பு விழாவில் 3வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து:

இதற்கு முன்னதாக, மே 10ஆம் தேதி நடைபெற்ற முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டதால் அது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. இதுகுறித்து அமைச்சர் ஆதார் அர்ஜுனா விளக்கம் அளித்திருந்தார். இனி தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: “அமைச்சரும், எம்எல்ஏக்களும் வேறு வேறு கிடையாது.. அனைவரும் சமம்”.. முதல்வர் விஜய் நெகிழ்ச்சி!!

அதன்படி, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது. மேலும், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தபோது, காவல்துறை சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us