AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அமைச்சரும், எம்எல்ஏக்களும் வேறு வேறு கிடையாது.. அனைவரும் சமம்”.. முதல்வர் விஜய் நெகிழ்ச்சி!!

இதனிடையே, நேற்று மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினார். அப்போது, வழங்கப்பட்ட பயிற்சிகள் அனைத்தும் பயனுள்ளதாக இருந்ததா என்றும், துறை சார்ந்த விளக்கங்கள் தெளிவாகப் புரிந்ததா என்றும் ஒவ்வொரு அமைச்சரிடமும், எம்.எல்.ஏ-க்களிடமும் தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

“அமைச்சரும், எம்எல்ஏக்களும் வேறு வேறு கிடையாது.. அனைவரும் சமம்”.. முதல்வர் விஜய் நெகிழ்ச்சி!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Jun 2026 08:47 AM IST

சென்னை, ஜுன் 18: 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடந்து முடிந்தன. இந்தத் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், “சட்டமன்றத்தில் முதலமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏ என்பது வேறு வேறு கிடையாது; மக்கள் பணியில் அனைவரும் சமம்” என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமின் விவரங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

மேலும் படிக்க: மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து.. அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!!

இரண்டு நாள் புத்தாக்கப் பயிற்சி:

புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் மரபுகளை அறிந்துகொள்ளும் வகையில், நேற்று காலை இப்புத்தாக்கப் பயிற்சி வகுப்பினை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். கடந்த ஜுன் 16ம் தேதி தொடங்கி நேற்று மாலை வரை இரண்டு நாட்கள் இந்த முகாம் நடைபெற்றது. இதில், முதல் நாள் பயிற்சியில், தலைமைச் செயலகப் பேரவை மரபுகள், விதிகள் மற்றும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எவ்வாறு கலந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பது குறித்து வல்லுநர்கள் மூலம் விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தொடர்ந்து, இரண்டாம் நாள் பயிற்சியில் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது துறை ரீதியான சந்தேகங்களை எப்படி எழுப்புவது, சபாநாயகர் மற்றும் அமைச்சர்களின் கவனத்தை எப்படி ஈர்ப்பது, விவாதங்களில் எவ்வாறு பங்கேற்பது போன்ற நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தனித்தனியாக கேட்டறிந்த முதல்வர்:

இதனிடையே, நேற்று மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினார். அப்போது, வழங்கப்பட்ட பயிற்சிகள் அனைத்தும் பயனுள்ளதாக இருந்ததா என்றும், துறை சார்ந்த விளக்கங்கள் தெளிவாகப் புரிந்ததா என்றும் ஒவ்வொரு அமைச்சரிடமும், எம்.எல்.ஏ-க்களிடமும் தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

“அனைவரும் சமம்” – முதல்வர் உரை:

தொடர்ந்து பேசிய முதல்வர், “சட்டப்பேரவையைப் பொறுத்தவரை முதலமைச்சர், அமைச்சர், எம்.எல்.ஏ என்ற பாகுபாடெல்லாம் கிடையாது; நாம் அனைவரும் மக்களுக்குப் பணியாற்ற வந்தவர்கள் என்ற வகையில் சமமானவர்களே. இந்த இரண்டு நாள் பயிற்சி அனைவருக்கும் தங்களது மக்கள் பணியை இன்னும் சிறப்பாகச் செய்யப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்” என்று பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: “அவங்க 2 பேரும் மதிமுக எம்எல்ஏக்களே இல்ல”.. பரபரப்பை கிளப்பிய துரை வைகோ!!

புதிய அரசின் கீழ் சட்டமன்ற ஜனநாயக மரபுகளை முறையாகக் கடைப்பிடிக்கும் நோக்கில், அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் ஒரே கூரையின் கீழ் இத்தகைய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us