IND vs SL: இலங்கைக்கு 2 வீரர்களை அவசரமாக அனுப்பும் பிசிசிஐ.. இந்த முக்கிய முடிவுக்கு காரணம் என்ன?
Team India Squad For Sri lanka: இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதார் மற்றும் சரன்ஷ் ஜெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியைத் தவறவிட்ட ஜடேஜா, பல மாதங்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார்.
இந்திய அணியின் இலங்கை (IND vs SL) சுற்றுப்பயணம் வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்க உள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, இந்திய அணியில் தொடர்ச்சியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. வளர்ந்து வரும் ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி , ஜஸ்பிரித் பும்ராவிற்கு (Jasprit Bumrah) பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது, இரண்டு புதிய வீரர்களை இலங்கைக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2 வீரர்கள் யார், எதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இந்திய அணிக்கு பும்ரா திரும்புவது எப்போது..? மருத்துவக்குழு கொடுத்த விளக்கம்!
யார் அந்த வீரர்கள்..?
ஹர்ஷ் துபே மற்றும் தனுஷ் கோட்டியன் ஆகியோர் நெட் பந்துவீச்சாளர்களாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தபோதிலும், ஹர்ஷ் துபே மற்றும் தனுஷ் கோட்டியன் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது இருவரும் நெட் பந்துவீச்சாளர்களாக இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு உதவுவார்கள்.




சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை, இந்திய அணியில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, மானவ் சுதார் மற்றும் சரன்ஷ் ஜெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியைத் தவறவிட்ட ஜடேஜா, பல மாதங்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் மானவ் சுதார் அணியில் தனது இடத்தைப் பிடித்தார். 33 வயதான சரன்ஷ் ஜெயின் முதல் முறையாக இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, ஹர்ஷ் துபே மற்றும் தனுஷ் கோட்டியன் ஆகியோர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அதாவது இன்று, இலங்கைக்குப் புறப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன்*, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், குர்ன் ப்ரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின்
ஹர்ஷ் துபே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமாகி, 2 போட்டிகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதற்கிடையில், 27 வயதான தனுஷ் கோட்டியன் இன்னும் இந்திய அணிக்காக அறிமுகமாகவில்லை. அவர் வலது கை ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளர் மற்றும் ஒரு சிறந்த பேட்ஸ்மேனும் ஆவார்.
இந்தியா – இலங்கை தொடர் அட்டவணை
- முதல் டெஸ்ட் – இந்தியா – இலங்கை – 2026 ஆகஸ்ட் 15–19 (காலி)
- இரண்டாவது டெஸ்ட் – இந்தியா – இலங்கை – 2026 ஆகஸ்ட் 23–27 (கொழும்பு)
கடந்த 18 ஆண்டுகளாக இலங்கை, இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை. இந்தியாவுக்கு எதிரான இலங்கையின் கடைசி டெஸ்ட் தொடர் வெற்றி 2008-ல் கிடைத்தது. அப்போது, மஹேல ஜெயவர்தனே இலங்கை அணிக்குத் தலைமை தாங்கினார. மேலும் குமார் சங்கக்கார, திலகரத்ன தில்ஷான் மற்றும் சமிந்த வாஸ் போன்ற ஜாம்பவான் வீரர்கள் அந்த அணியில் இடம்பெற்றிருந்தனர். அதன் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே மொத்தம் 6 டெஸ்ட் தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 5 முறை வெற்றி பெற்றுள்ளது மற்றும் ஒரு தொடர் சமனில் முடிந்துள்ளது.