AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: இந்திய அணிக்கு பும்ரா திரும்புவது எப்போது..? மருத்துவக்குழு கொடுத்த விளக்கம்!

Jasprit Bumrah Returns: பும்ரா கடந்த 2026 ஜூலை கடைசி வாரம் உடற்தகுதி சோதனைகளுக்காக பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸுக்கு சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பும்ரா உடனடியாக பந்துவீசத் தொடங்கினால், அவர் நீண்ட காலம் விளையாடாமல் இருக்க நேரிடும் என்றும், அது பிரச்சனையை மேலும் மோசமாக்கக்கூடும் என்றும் அங்குள்ள மருத்துவக் குழு தெரிவித்தது. 

Team India: இந்திய அணிக்கு பும்ரா திரும்புவது எப்போது..? மருத்துவக்குழு கொடுத்த விளக்கம்!
ஜஸ்பிரித் பும்ரா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Aug 2026 17:48 PM IST

வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக விலக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 3ம் தேதி அவருக்குப் பதிலாக மற்றொரு வீரரை அறிவித்தது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி அவருக்குப் பதிலாக இந்திய அணியில் (Indian Cricket Team) சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், அடுத்த ஆண்டு நடைபெறும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக பும்ராவின் உடற்தகுதி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், பும்ரா மீண்டும் அணிக்குத் திரும்ப எவ்வளவு காலம் ஆகும் என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: இலங்கை சுற்றுப்பயணம்.. பும்ராவிற்கு பதிலாக இந்த ரஞ்சி நட்சத்திரத்திற்கு வாய்ப்பு..!

பும்ராவின் காயம் இந்திய அணிக்கு எப்போதுமே ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. அவரது இல்லாமை இந்திய அணியை கணிசமாக நிலைகுலையச் செய்கிறது. முன்னதாக, கார்டிஃபில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது பும்ராவுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அவர் அந்தக் காயத்திலிருந்து இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை.

பும்ரா திரும்பி வர எவ்வளவு நேரம் ஆகும்?

ESPNcricinfo-வில் வெளியான ஒரு அறிக்கையின்படி, பும்ரா கடந்த 2026 ஜூலை கடைசி வாரம் உடற்தகுதி சோதனைகளுக்காக பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸுக்கு சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பும்ரா உடனடியாக பந்துவீசத் தொடங்கினால், அவர் நீண்ட காலம் விளையாடாமல் இருக்க நேரிடும் என்றும், அது பிரச்சனையை மேலும் மோசமாக்கக்கூடும் என்றும் அங்குள்ள மருத்துவக் குழு தெரிவித்தது.

அதன்படி, பும்ரா மீண்டும் அணிக்குத் திரும்புவதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. ஆனால் அவர் இன்னும் சில காலம் விளையாடாமல் இருக்கக்கூடும் என்பது தெளிவாகிறது. பும்ரா தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் எந்த முடிவையும் அவசரமாக எடுக்க விரும்பாது.

ஐபிஎல்-க்கு முன்பே உடற்தகுதிப் பிரச்சினை:

பும்ரா இதற்கு முன்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் சென்றார். அங்கு, மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான தொடக்கப் போட்டிக்கு சற்று முன்பு பும்ரா உடற்தகுதி அனுமதியைப் பெற்றார். இருப்பினும், அடுத்தடுத்து ஒருசில போட்டிகளில் விளையாடிய நிலையில் அவருக்குத் தொடர்ச்சியாக ஏற்படும் காயங்கள் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ALSO READ: பும்ரா இல்லாததால் பந்துவீச்சில் பலம் குறைந்த இந்திய அணி.. மாற்று வீரராக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி

சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன்* (உடற்தகுதிக்கு உட்பட்டு விளையாடுகிறார்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், முகமது சிராஜ், குனூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின், ஆகிப் நபி.

Follow Us