Team India: 2027 உலகக் கோப்பையில் இடம் இருக்குமா? எதிர்காலம் குறித்து மனம் திறந்த புவனேஷ்வர் குமார்!
Bhuvneshwar Kumar About 2027 WC: புவனேஷ்வர் குமார் நவம்பர் 2022 முதல் இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. 4 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், 36 வயதான புவனேஷ்வர் குமார், இந்திய அணிக்குத் திரும்புவது தனது இலக்கு அல்ல என்றும், கிரிக்கெட் மீதான அன்பு மற்றும் பேரார்வத்தின் காரணமாக மட்டுமே இந்த விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கூறுகிறார்.
புவனேஷ்வர் குமார் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட விரும்பவில்லை. இந்தியாவின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், இந்திய அணிக்குத் திரும்பும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். சமீபத்தில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், 2027 உலகக் கோப்பைக்கான (2027 ODI World Cup) உத்தேச இந்திய அணியைத் தேர்ந்தெடுத்தபோது, புவனேஷ்வர் மீண்டும் அணிக்குத் திரும்ப வேண்டும் என்று பரிந்துரைத்தார். புவனேஷ்வர் குமார், கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஒரு அங்கமாக இருந்தார்.
ALSO READ: உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகள்.. புது சாதனை படைக்க ஐசிசி திட்டம்!




புவனேஷ்வர் குமார் நவம்பர் 2022 முதல் இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. 4 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், 36 வயதான புவனேஷ்வர் குமார், இந்திய அணிக்குத் திரும்புவது தனது இலக்கு அல்ல என்றும், கிரிக்கெட் மீதான அன்பு மற்றும் பேரார்வத்தின் காரணமாக மட்டுமே இந்த விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் கூறுகிறார்.
ஆர்சிபி பாட்காஸ்டில் பல தலைப்புகளில் புவனேஷ்வர் குமார் கூறியதாவது, “எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். அதனால்தான், நான் அதை விளையாடுகிறேன்.நான் ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது, எனக்கு இந்த விளையாட்டின் மீதுள்ள காதலால்தான். நீங்கள் இளமையாக இருக்கும்போது இந்திய அணிக்காக விளையாடும்போது, உங்களுக்கு இந்த விளையாட்டின் மீது காதல் இருப்பதாகச் சொல்வீர்கள். ஆனால் உண்மையைச் சொல்லப்போனால், ‘உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதைக் கட்டுப்படுத்துங்கள்’, ‘அதிகமாக யோசிக்காதீர்கள்’, மற்றும் ‘உணர்ச்சிப்பூர்வமாக விளையாடுங்கள்’ ஆகிய விழுமியங்களை என்னால் உள்வாங்க முடிந்துள்ளது.” என்றார்.
ALSO READ: வேறு அணிக்கு செல்கிறாரா ஹர்திக் பாண்ட்யா..? விளக்கிய மும்பை இந்தியன்ஸ்!
இந்திய அணிக்கு திரும்புவது குறித்து விளக்கம்:
🔴 I DON’T PLAY FOR AN INDIA COMEBACK ANYMORE – BHUVI 🤯
Bhuvneshwar Kumar said🎙️: He has already fulfilled his dream of playing for India, so making a comeback is no longer his main goal.
– He explained that he now plays purely for the love of cricket. However, he remains… pic.twitter.com/4i4ViZ2ee5
— Sam (@cricsam02) August 2, 2026
தனக்கு இப்போது சாதிக்க எதுவும் இல்லை என்று புவனேஷ்வர் குமார் தெளிவாகக் கூறினார். அதில், “நான் இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறேன், இதை நான் சாதிக்க விரும்பவில்லை. எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும், ஆனால் நான் இதற்கு முன்பும் இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறேன். நான் இப்போது என்ன செய்தாலும், அதை கிரிக்கெட்டின் மீதான காதலுக்காகவே செய்கிறேன். நான் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்,” என்றார்.