AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. பும்ரா காயத்தால் விலகல்!

Jasprit Bumrah Injury: ஜஸ்பிரித் பும்ரா இடது முழங்கால் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். பும்ரா பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் இருக்கிறார். தகவல்களின்படி, பிசிசிஐ மருத்துவக் குழு அவரை மீண்டும் களத்திற்குத் திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. பும்ரா முழுமையாகக் குணமடையும் வரை ஓய்வெடுக்குமாறு பிசிசிஐ பரிந்துரைக்கின்றனர்

IND vs SL: இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. பும்ரா காயத்தால் விலகல்!
ஜஸ்பிரித் பும்ரா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Aug 2026 15:58 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) அடுத்த சர்வதேசத் தொடர், இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராகும். இந்திய அணி வருகின்ற 2026 ஆகஸ்ட் 4ம் தேதி இலங்கை நாட்டிற்கு புறப்படும். ஆனால் அதற்கு முன்பாக, இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) இந்தத் தொடர் முழுவதிலிருந்தும் காயம் காரணமாக விலகியுள்ளார். கிடைத்த தகவல்களின்படி, பும்ரா மீண்டும் வருவதை அவசரப்படுத்த நிர்வாகம் விரும்பாததால், இந்தத் தொடரில் அவருக்கு ஓய்வளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிசிசிஐ பும்ராவை அணியில் தேர்வு செய்திருந்தாலும், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே அவரது பங்கேற்பு தீர்மானிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

ALSO READ: இந்திய அணி இன்னும் எத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்? முழு விவரம் இதோ!

இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி காலியில் நடைபெறும். அதற்கு முன்னதாக, இந்திய அணி வருகின்ற 2026 ஆகஸ்ட் 7ம் தேதி கொழும்பில் தொடங்கி, இலங்கை XI அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சிப் போட்டியில் விளையாடும். சுப்மன் கில்லும் அவரது அணியினரும் வருகின்ற 2026 ஜூன் 4ம் தேதி கொழும்புக்குப் புறப்படுவார்கள். 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாகும். மேலும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு பந்துவீச்சாளர் அணியில் இல்லாதது ஒரு பெரும் பின்னடைவாகும்.

முழுமையாக குணமடையாத பும்ரா:


ஜஸ்பிரித் பும்ரா இடது முழங்கால் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். பும்ரா பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் இருக்கிறார். தகவல்களின்படி, பிசிசிஐ மருத்துவக் குழு அவரை மீண்டும் களத்திற்குத் திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. பும்ரா முழுமையாகக் குணமடையும் வரை ஓய்வெடுக்குமாறு பிசிசிஐ பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், இந்தச் செய்தியை எழுதும் நேரத்தில் இதுகுறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ALSO READ: இலங்கையில் யார்க்கரை இறக்க தயார்.. முழு உடற்தகுதி பெற்ற பும்ரா..!

இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர் 2026 அட்டவணை

  • 2026 ஆகஸ்ட் 15-19 – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • 2026 23-27 – சிங்கள விளையாட்டு மன்றம்

Follow Us