ODI World Cup 2027: 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி.. இந்த 6 வீரர்கள் மட்டுமே உறுதி..!
India Probable Squad 2027 ODI World Cup: ஹர்திக் பாண்ட்யா சந்தேகத்திற்கு இடமின்றி அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். ஆனால், அவர் காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்ட்யா உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவரால் விளையாட முடியும். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பிரிவில், ஹர்ஷ் துபே மற்றும் சரன்ஷ் ஜெயின் உட்பட சமீபத்தில் புதிய தேர்வுகள் ஆராயப்பட்டுள்ளன.
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான (2027 ODI World Cup) இந்திய அணியை தயார் செய்யும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டது. உலகக் கோப்பைக்கு முன்பாக சிறந்த அணியை உருவாக்கும் நோக்கத்தில் புதிய வீரர்கள் பலரையும் இந்திய அணிக்குள் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், உலகக் கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) பங்கேற்பார்களா என்பதே சந்தேகத்தில் உள்ளது. இந்தநிலையில், இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்களின் திட்டங்களைப் பார்க்கும்போது, வருகின்ற 2027ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி சுப்மன் கில்லின் தலைமையில் விளையாடும் என்பது தெளிவாகிறது. குறிப்பாக பந்துவீச்சில், முற்றிலும் இந்திய அணிக்குள் அனுபவ பந்துவீச்சாளர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்கள் அதிகளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பந்துவீச்சில், உலகக் கோப்பை ஆடும் லெவனில் யாருக்கு இடம் உறுதி, யாருக்கு இல்லை என்று சொல்வது இயலாத காரியம்.
ALSO READ: டி20 முதல் டெஸ்ட் வரை.. டாப் 10 தரவரிசையில் இருக்கும் இந்திய வீரர்கள் பட்டியல்!
6 வீரர்களின் பெயர்கள் மட்டுமே உறுதி:
வருகின்ற 2027ம் ஆண்டு உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவது இந்திய அணிக்கு ஒரு சாதகமான விஷயமாகும். 3 அல்லது அதற்கு மேற்பட்ட உலகக் கோப்பைகளில் விளையாடிய 2 வீரர்கள் அணியில் இருப்பது ஒரு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் சமீபத்திய ஆட்டத்திறனைக் கருத்தில் கொண்டு, அவரை உலகக் கோப்பையிலிருந்து நீக்குவது குறித்து தேர்வாளர்கள் பரிசீலிக்க வாய்ப்பில்லை. இந்த இருவரைத் தவிர, கேப்டன் சுப்மன் கில்லின் இடமும் உறுதியாகியுள்ளது.




சுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்குப் பிறகு, ஷ்ரேயாஸ் ஐயரின் இடமும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது போல் தெரிகிறது. ஏனெனில், ஷ்ரேயாஸ் நீக்கப்பட்டால் 4-வது இடத்திற்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்படும். ஷ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே 4-வது இடத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அதேநேரத்தில், கே.எல். ராகுல் 5-வது இடத்தில் களமிறங்குவார். ஏனெனில் ஒருநாள் அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பராகவும் இருக்கிறார். பந்துவீச்சை பொறுத்தவரை, ஜஸ்பிரித் பும்ராவின் பெயர் மட்டுமே உறுதியாகத் தெரிகிறது. உடற்தகுதியுடன் இருந்தால், உலகக் கோப்பையில் பும்ரா பந்துவீச்சுத் தாக்குதலை தொடரலாம்.
எந்தெந்த வீரர்கள் களமிறங்க வாய்ப்பு?
ஹர்திக் பாண்ட்யா சந்தேகத்திற்கு இடமின்றி அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். ஆனால், அவர் காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். உலகக் கோப்பையின் போது ஹர்திக் பாண்ட்யா உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே அவரால் விளையாட முடியும். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பிரிவில், ஹர்ஷ் துபே மற்றும் சரன்ஷ் ஜெயின் உட்பட சமீபத்தில் புதிய தேர்வுகள் ஆராயப்பட்டுள்ளன. ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா வடிவில் ஏராளமான வேகப்பந்து வீச்சுத் தேர்வுகள் உள்ளன. யாருக்கு வாய்ப்பு வழங்குவது, யாருக்கு வழங்காமல் இருப்பது என்பதைத் தீர்மானிப்பது தேர்வாளர்களுக்கு ஒரு பெரும் தலைவலியாக இருக்கும்.
ALSO READ: 2027 ஒருநாள் உலகக் கோப்பை.. நடைபெறும் ஸ்டேடியங்களின் பட்டியலை வெளியிட்ட ஐசிசி!
சுழற்பந்து வீச்சுப் பொறுப்பை யார் ஏற்பார் என்பதும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏனெனில், கடந்த சில மாதங்களாக வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட ஆல்ரவுண்டர் வீரர்கள் மட்டுமே சுழற்பந்து வீச்சுப் பொறுப்பை ஏற்று வந்த நிலையில், குல்தீப் யாதவ் தொடர்ந்து பெஞ்சில் அமர்ந்திருப்பதும் காணப்படுகிறது.