CWG 2026: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா.. பைனலில் களமிறங்குவது எப்போது?
Neeraj Chopra: தகுதிச் சுற்றில் 79.61 மீட்டர் தூரம் எறிந்து, நீரஜ் இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார். இந்தியாவின் மற்ற 2 இந்திய ஈட்டி எறிதல் வீரர்களான ரோஹித் யாதவ் மற்றும் யஷ்வீர் சிங் ஆகியோரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் (CommonWealth Games 2026) இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். தகுதிச் சுற்றில் 79.61 மீட்டர் தூரம் எறிந்து, நீரஜ் இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார். இந்தியாவின் மற்ற 2 இந்திய ஈட்டி எறிதல் வீரர்களான ரோஹித் யாதவ் மற்றும் யஷ்வீர் சிங் ஆகியோரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். தகுதிச் சுற்றில் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) 5வது இடத்தைப் பிடித்தார். வழக்கமாக 80 மீட்டரை எளிதாகக் கடக்கும் நீரஜ் சோப்ரா, இந்த முறை 79.61 மீட்டரை மட்டுமே எறிந்தார். இதற்கிடையில், இலங்கையின் ரூமேஷ் பத்திரகே 82.84 மீட்டர் தூரம் எறிந்து தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார்.
ALSO READ: இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா.. சிங்கமாய் காமன்வெல்த்தில் களமிறங்குவது எப்போது?




இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்..?
‘Golden Boy’ Neeraj Chopra officially kicks off his CWG campaign with an opening throw of 76.28 meters. He is just getting warmed up! 💥✨
Watch #GLASGOW2026 LIVE on #SonyLIV & #SonySportsNetwork 📺📲 pic.twitter.com/c7F7mABXeD
— Sony LIV (@SonyLIV) July 30, 2026
ஆடவர் ஈட்டி எறிதல் இறுதி போட்டிக்கு மொத்தம் 12 வீரர்கள் தகுதி பெற்றனர். பாரிஸ் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும், தகுதிச் சுற்றில் 78.63 மீட்டர் தூரம் எறிந்து 7வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்ற போட்டியாளர்கள் பட்டியல்:
- ருமேஷ் பத்திரகே (இலங்கை) – 82.84 மீ
- ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரே நாடா) – 81.29மீ
- டவ் ஸ்மிட் (தென் ஆப்பிரிக்கா) – 80.64 மீ
- பென் ஈஸ்ட் (இங்கிலாந்து) – 80.38மீ
- நீரஜ் சோப்ரா (இந்தியா) – 79.61 மீ
- கேமரூன் மெக்கின்டைர் (ஆஸ்திரேலியா) – 78.91 மீ
- அர்ஷத் நதீம் (பாகிஸ்தான்) – 78.63மீ
- கீஷான் ஸ்ட்ராசன் (பஹாமாஸ்) – 78.60 மீ
- ரோஹித் யாதவ் (இந்தியா) – 78.37 மீ
- யஷ்விர் சிங் (இந்தியா) – 78.36 மீ
- கீஷோர்ன் வால்காட் (டிரினிடாட்) – 78.26 மீ
- சினிசெரெம் நம்டி (நைஜீரியா) – 75.27 மீட்டர்
இறுதிப் போட்டி எப்போது நடைபெறும்?
ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி வருகின்ற 2026 ஆகஸ்ட் 1ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 12:45 மணிக்குத் தொடங்கும். இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற அனைவரில், மிக நீண்ட தூரம் எறிந்த வீரருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
ALSO READ: காமன்வெல்த்: 100 மீட்டர் ரேஸில் இந்தியாவுக்கு தங்கம்.. வெற்றியை ருசித்த திலீப் காவிட்
நீரஜ் சோப்ரா 8 வருட இடைவெளிக்குப் பிறகு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மீண்டும் களமிறங்குகிறார். காயம் காரணமாக நீரஜ் சோப்ரா கடந்த 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆடவர் ஈட்டி எறிதலில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சாதனை பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷத் நதீம் வசம் உள்ளது. அர்ஷத் கான் கடந்த 2022ம் ஆண்டு 90.18 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.