AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

CWG 2026: கபடி டூ பளுதூக்குதல்.. காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற ஹர்ஜிந்தர் கவுர்.. யார் இவர்?

Harjinder Kaur Wins Silver: ஹர்ஜிந்தர் கவுர் தனது பள்ளி நாட்களில் முதன்முதலில் கபடி விளையாட்டையே விளையாட தொடங்கினார். இந்த கபடி விளையாட்டின் பயிற்சிக்காக தினமும் 5 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவார். கபடியில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதும் அவரது பெரும் கனவாக இருந்தது.

CWG 2026: கபடி டூ பளுதூக்குதல்.. காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற ஹர்ஜிந்தர் கவுர்.. யார் இவர்?
ஹர்ஜிந்தர் கவுர்Image Source: CWG
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Jul 2026 18:03 PM IST

கிளாஸ்கோவில் நடைபெறும் 2026 காமன்வெல்த் விளையாட்டு (Common Wealth Games 2026) போட்டிகளில், பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய பளுதூக்கும் (Weightlift) வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். ஹர்ஜிந்தர் மொத்தம் 227 கிலோ (ஸ்னாட்ச் பிரிவில் 101 கிலோ + கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 126 கிலோ) எடையைத் தூக்கி, தனது தனிப்பட்ட சிறந்த சாதனையைப் பதிவு செய்தார். 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த ஹர்ஜிந்தர், இம்முறை தனது பதக்கத்தின் நிறத்தையே மாற்றி, வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ALSO READ: விரைவில் ஆசிய விளையாட்டு போட்டிகள்.. பலமிக்க இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு!

கபடியால் கிடைத்த கை பலம்:

ஹர்ஜிந்தர் கவுர் தனது பள்ளி நாட்களில் முதன்முதலில் கபடி விளையாட்டையே விளையாட தொடங்கினார். இந்த கபடி விளையாட்டின் பயிற்சிக்காக தினமும் 5 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவார். கபடியில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதும் அவரது பெரும் கனவாக இருந்தது. இதனை தொடர்ந்து, 2016ம் ஆண்டு, பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ​​அவனது உடல் வலிமையைக் கவனித்த பயிற்சியாளர் பரம்ஜீத் சர்மா, பளுதூக்குதலை மேற்கொள்ளுமாறு அறிவுரை கூறினார். அதுவே அவனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

வறுமையை வென்ற விவசாயியின் மகள்!

பஞ்சாபில் உள்ள நாபா அருகே மைஹாஸ் என்ற சிறிய கிராமத்தில், ஹர்ஜிந்தர் கவுர் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை சாஹிப் சிங்குக்குச் சொந்தமாகச் சில ஏக்கர் நிலம் மட்டுமே இருந்ததால், தன் மகளின் விளையாட்டுச் செலவுகளையும் உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்ய ஹர்ஜிந்தர் கவுர் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்க வேண்டியிருந்தது.

இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த, ஹர்ஜிந்தர் கவுர் சர்வதேச அளவை எட்ட வேண்டியிருந்தது. இதற்காக ஹர்ஜிந்தர் கவுர் இரவும் பகலும் உழைத்தார். இந்த முயற்சியுடன், அவர் விவசாயத்திலும் ஈடுபட்டிருந்தார்.

ஹர்ஜிந்தரின் அசாதாரணமான மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை வலிமைக்குக் காரணம் அவரது கிராம மக்களின் கடின உழைப்பே காரணம் என்று கூறப்படுகிறது. சிறு வயதில், ஹர்ஜிந்தர் கவுர் வயல்களில் இருந்து புல்லைத் தனது வீட்டிற்குக் கொண்டு வந்து, பல நாட்கள் ‘டோக்கா’ (கையால் இயக்கும் புல் வெட்டும் கருவி) கொண்டு வேலை செய்வார். இந்த கடினமான நாட்டுப்புற உழைப்பு, அவர் அறியாமலேயே அவரது கைகளை வலுப்படுத்தியது. அதுவே பிற்காலத்தில் பளுதூக்குதலில் அதிக எடையைத் தூக்க அவருக்கு உதவியது.

ALSO READ: சிறிய நாட்டில் இருந்து வெண்கல பதக்கம்.. அசத்திய 17 வயது வீராங்கனை!

ஹர்ஜிந்தர் கவுர் சர்வதேச சாதனைகள்:

  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026: 69 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம்.
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022: 71 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம்.
  • காமன்வெல்த் சாம்பியன்ஷிப் 2025: 69 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம்.
  • ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2026: ஸ்னாட்ச் பிரிவில் வெண்கலப் பதக்கம்.

Follow Us