ICC ODI World Cup 2027: 2027 ஒருநாள் உலகக் கோப்பை.. நடைபெறும் ஸ்டேடியங்களின் பட்டியலை வெளியிட்ட ஐசிசி!
ICC ODI World Cup 2027 Venue: 2027 ஒருநாள் உலகக் கோப்பையின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. உலகக் கோப்பையில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன, மேலும் இந்தத் தொடர் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலில், தகுதி பெற்ற அணிகளில் மிகக் குறைந்த தரவரிசையில் உள்ள 3 அணிகளுக்கு இடையே சூப்பர் சீரிஸ் நடைபெறும்.
2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை (ICC ODI World Cup 2027) வருகின்ற 2027ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த இருக்கின்றன. இத்தொடருக்காக ஐசிசி மொத்தமாக 12 ஸ்டேடியங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 2027 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்துவதற்காக தென்னாப்பிரிக்காவில் 8 ஸ்டேடியங்களும், ஜிம்பாப்வேயில் மூன்று ஸ்டேடியங்களும், நமீபியாவில் ஒரு ஸ்டேடியமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டேடியம் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட்களையும் ஐசிசி (ICC) இன்று அதாவது 2026 ஜூலை 30ம் தேதி வெளியிட்டது.
ALSO READ: ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு ரோஹித் நீக்கமா? ஓய்வா? பிசிசிஐ விளக்கம்!




2027 ஒருநாள் உலகக் கோப்பை எப்போது தொடங்குகிறது..?
𝐃𝐞𝐬𝐭𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 ➡️ #𝐂𝐖𝐂𝟐𝟕 🏆
The 12 venues set to host the ICC Men’s Cricket World Cup 2027 have officially been confirmed 🏟️https://t.co/QLxDyjmGjC
— ICC (@ICC) July 30, 2026
2027 ஒருநாள் உலகக் கோப்பை வருகின்ற 2027 அக்டோபர் 4ம் தேதி தொடங்கி 2027 நவம்பர் 21ம் தேதி வரை நடைபெறும். 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு கிரிக்கெட் உலகக் கோப்பை மீண்டும் நடத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்காவில் கடைசியாக 2003ம் ஆண்டு உலகக் கோப்பை நடைபெற்றது. அப்போது தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய நாடுகள் இணைந்து இப்போட்டியை நடத்தின.
ஸ்டேடியங்களின் பட்டியல்
- தென்னாப்பிரிக்கா – வாண்டரர்ஸ் ஸ்டேடியம் (ஜோகன்னஸ்பர்க்), செஞ்சூரியன் (ஷ்வானே), நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் (கேப் டவுன்), கிங்ஸ்மீட் கிரிக்கெட் மைதானம் (டர்பன்), செயின்ட் ஜார்ஜ் பார்க் (கெபெர்ஹா), மங்காங் ஓவல் (ப்ளூம்ஃபோன்டைன்), போலன்ட் பார்க் (பார்ல்), பஃபலோ பார்க் (குகோம்போ சிட்டி)
- ஜிம்பாப்வே – ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் (ஹராரே), குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (புலவாயோ), ஃபேல் மோசி-ஓ-துன்யா சர்வதேச மைதானம் (விக்டோரியா ஃபால்ஸ்)
- நமீபியா – நமீபியா கிரிக்கெட் மைதானம் (விண்ட்ஹோக்)
ALSO READ: டி20 முதல் டெஸ்ட் வரை.. டாப் 10 தரவரிசையில் இருக்கும் இந்திய வீரர்கள் பட்டியல்!
போட்டி நடத்தும் வடிவத்திலும் மாற்றம்:
2027 ஒருநாள் உலகக் கோப்பையின் வடிவமும் மாற்றப்பட்டுள்ளது. உலகக் கோப்பையில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன, மேலும் இந்தத் தொடர் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலில், தகுதி பெற்ற அணிகளில் மிகக் குறைந்த தரவரிசையில் உள்ள 3 அணிகளுக்கு இடையே சூப்பர் சீரிஸ் நடைபெறும். அதில் இருந்து ஒரே ஒரு அணி மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும். பின்னர், 12 அணிகளும் தலா 6 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். அதில் இருந்து 7 அணிகள் அடுத்த கட்டமான சூப்பர் 7 சுற்றுக்கு முன்னேறும். அதைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும்.