AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: வரலாற்று சாதனையை நோக்கி கே.எல். ராகுல்.. இந்தச் சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் இவர்தான்!

KL Rahul Record: கே.எல். ராகுல் இந்தியாவுக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் 4,153 ரன்களும், 98 ஒருநாள் போட்டிகளில் 3,412 ரன்களும், 72 டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,265 ரன்களும் எடுத்துள்ளார். இப்போது, ​​இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெறும் 170 ரன்கள் எடுப்பதன் மூலம், அவரால் இந்திய கிரிக்கெட்டில் ஒரு தனித்துவமான சாதனையை உருவாக்க முடியும்.

IND vs SL: வரலாற்று சாதனையை நோக்கி கே.எல். ராகுல்.. இந்தச் சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய கிரிக்கெட் வீரர் இவர்தான்!
கே.எல்.ராகுல்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Jul 2026 18:41 PM IST

9 வருட இடைவெளிக்குப் பிறகு, இந்திய மற்றும் இலங்கை ரசிகர்கள் அடுத்த 2026 ஆகஸ்ட் மாதம் இலங்கையில் (IND vs SL) ஒரு முறையான டெஸ்ட் தொடரைக் காணவிருக்கின்றனர். நடைபெற்று வரும் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியான இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் கே.எல். ராகுலுக்கு ஒரு சிறப்பான தொடராக அமையக்கூடும். சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எட்டுவதற்கு கே.எல். ராகுல் (KL Rahul) இன்னும் 170 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார். கே.எல். ராகுல் இந்த சாதனையை படைத்தால், இன்றுவரை எந்த இந்திய வீரராலும் செய்ய முடியாத ஒரு சிறப்புச் சாதனையை அவர் நிகழ்த்துவார். இந்திய அணி வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கும் இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பு கே.எல். ராகுலுக்கு கிடைத்துள்ளதால், இந்தத் தொடர் அவருக்கு மிகவும் சிறப்பானதாக அமையும்.

ALSO READ: காயத்தில் இருக்கும் கில், பும்ரா.. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார்களா?

சிறப்பு சாதனையை படைப்பாரா கே.எல்.ராகுல்..?

கே.எல். ராகுல் இதுவரை 3 வடிவங்களிலும் சேர்த்து மொத்தம் 9,830 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை நிறைவு செய்ய அவருக்கு இன்னும் 170 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. அதன்படி, இலங்கைக்கு எதிரான தொடரில் அவரால் இந்த இலக்கைக் கடக்க முடியும். கே.எல். ராகுலின் இந்தச் சாதனை மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்து கூட வீசாமல் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை கே.எல்.ராகுலால் படைக்க முடியும்.

பந்துவீசாமல் இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கே.எல். ராகுல் 9,830 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து அஜிங்க்யா ரஹானே 8,414 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 5,637 ரன்களுடனும், இஷான் கிஷன் 2,793 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

கே.எல். ராகுல் இந்தியாவுக்காக 68 டெஸ்ட் போட்டிகளில் 4,153 ரன்களும், 98 ஒருநாள் போட்டிகளில் 3,412 ரன்களும், 72 டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,265 ரன்களும் எடுத்துள்ளார். இப்போது, ​​இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெறும் 170 ரன்கள் எடுப்பதன் மூலம், அவரால் இந்திய கிரிக்கெட்டில் ஒரு தனித்துவமான சாதனையை உருவாக்க முடியும்.

ALSO READ: 2027 ஒருநாள் உலகக் கோப்பை.. நடைபெறும் ஸ்டேடியங்களின் பட்டியலை வெளியிட்ட ஐசிசி!

இந்திய அணியின் முழு விவரம்:

சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன்*, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், ஜஸ்பிரித் பும்ரா*, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவதூத் படிக்கல், சரன்ஷ் ஜெயின்.

Follow Us