ECB: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பெரும் மாற்றம்.. புதிய கேப்டனா இவரா? பயிற்சியாளராக அவரா?
England Cricket Team: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஸ்டீபன் ஃபிளெமிங்கை தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. சிஎஸ்கே அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், தற்போது பிரண்டன் மெக்கல்லமிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீபன் ஃபிளெமிங் நியூசிலாந்து அணிக்காக 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒரு மாற்றம் எதிர்பார்க்கப்பட்டது. இங்கிலாந்து அணி தற்போது ஒரு புதிய கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளரையும் அறிவித்துள்ளது. அதன்படி, ஜோ ரூட்டிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ஜோ ரூட் (Joe Root) இங்கிலாந்து அணியின் டெஸ்ட் (Test) கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையில், இங்கிலாந்து 27 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக, இங்கிலாந்துக்கு ஒரு அனுபவமிக்க கேப்டன் மீண்டும் கிடைத்துள்ளார்.
மறுபுறம், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஸ்டீபன் ஃபிளெமிங்கை தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது. சிஎஸ்கே அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஃபிளெமிங், தற்போது பிரண்டன் மெக்கல்லமிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். ஃபிளெமிங் நியூசிலாந்து அணிக்காக 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், ஃபிளெமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 18 ஆண்டுகள் பயிற்சியாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். எனவே, அவருக்கு வலுவான அனுபவம் உள்ளது.




ALSO READ: இந்தியாவில் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரா? குஷியில் இந்திய ரசிகர்கள்!
ஃபிளெமிங் கூறியது என்ன..?
Fleming 🤝 Root
Click below for full story:
— England Cricket (@englandcricket) July 30, 2026
தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பது குறித்த தனது முடிவைப் பற்றி ஸ்டீபன் ஃபிளெமிங் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், ”இங்கிலாந்து அணியில் இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது உலக கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்க பயிற்சியாளர் பதவிகளில் ஒன்றாகும். மேலும், இந்தப் பொறுப்பை ஏற்பதில் நான் பெருமைப்படுகிறேன். வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதையும், மெக்கல்லம் மற்றும் ஸ்டோக்ஸின் சாதனைகளை மேலும் வளர்ப்பதையும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வெற்றி பெறுவதே எங்கள் நோக்கம். ஆனால் அதே சமயம், இங்கிலாந்து அணி தனது எதிர்காலத்தை வலுப்படுத்துவதை உறுதி செய்வதும் சம முக்கியத்துவம் வாய்ந்தது.” என்றார்.
ALSO READ: காயத்தில் இருக்கும் கில், பும்ரா.. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார்களா?
ஜோ ரூட் என்ன சொன்னார்?
ஜோ ரூட் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேப்டன் பதவிக்குத் திரும்பியுள்ளார். ரூட் 65 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை வழிநடத்தி, அவற்றில் 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ரூட் 2017 முதல் 2022 வரை இங்கிலாந்து அணியை வழிநடத்தினார். மீண்டும் கேப்டன் பதவியை ஏற்ற பிறகு ஜோ ரூட் கூறுகையில், ‘இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டனாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது ஒரு பெரும் கௌரவமும் பாக்கியமும் ஆகும். டெஸ்ட் கேப்டன் பதவி ஒரு கடினமான ஆனால் அற்புதமான பணி, அதற்கு நான் தயாராக இருக்கிறேன்’ என்றார்.