Ashes: இந்தியாவில் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரா? குஷியில் இந்திய ரசிகர்கள்!
Ashes Test in India: கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற போட்டி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடராகும். இந்தத் தொடர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தத் தொடர் இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படுகிறது. ஆனால் தற்போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் ஒரு வித்தியாசமான யோசனை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் (India) மிகப்பெரிய விளையாட்டாக கிரிக்கெட் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் கிரிக்கெட்டின் பிரபலமானது அதிகபடியான ரசிகர்களை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஒவ்வொரு நாடும் இந்தியாவிற்கு வந்து கிரிக்கெட் விளையாட ஆர்வமாக உள்ளது. அதுமட்டுமின்றி, பிற நாடுகளை சேர்ந்த போட்டிகளை நடத்துவதில் இந்தியாவும் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் தற்போது, இந்தியாவில் பல்வேறு அணிகளின் போட்டிகளை நடத்துவது குறித்துப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. மற்ற அணிகளும் இந்திய மைதானங்களில் போட்டிகளில் விளையாட ஆர்வமாக உள்ளன. ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் (Big Bash League) தொடர் குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒரு படி மேலே சென்று, ஆஷஸ் தொடரின் ஒரு போட்டியை இந்தியாவில் நடத்த ஆர்வமாக உள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு விளையாட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஏனெனில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மோதலை இந்தியாவில் காண ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
ALSO READ: சென்னைக்கு வரும் ஹர்திக்.. மும்பைக்கு யார்? சிஎஸ்கே – மும்பை இடையே பரிமாற்றமா?




இங்கிலாந்து ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர்
கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற போட்டி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடராகும். இந்தத் தொடர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தத் தொடர் இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படுகிறது. ஆனால் தற்போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் ஒரு வித்தியாசமான யோசனை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டாட் கிரீன்பெர்க், ஒரு முன்மொழிவை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிபிசி-க்கு அளித்த பேட்டியில், ஆஷஸ் தொடரின் ஒவ்வொரு அம்சத்தையும் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும், ஆஷஸ் தொடரின் ஒரு போட்டியை இந்தியாவில் நடத்தும் யோசனையும் இதில் அடங்கும் என்று தெரிவித்தார். மேலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கும் பிசிசிஐ-க்கும் இடையேயான வலுவான உறவைக் குறிப்பிட்ட கிரீன்பெர்க், இந்தியாவில் ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு இருப்பதாகவும், அதை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
ALSO READ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதுகிறதா? வெளியான அட்டவணை!
பிக் பாஷ் லீக்கிற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்பட்ட புரட்சி
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அடுத்த 2027 ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அந்த வகையில், இந்தப் போட்டிகள் அனைத்தும் இங்கிலாந்தில் நடத்த திட்டமியப்பட்டுள்ளது. ஆனால், எதிர்காலத்தில் இந்தியாவில் ஒரு போட்டியை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என்று கிரீன்பெர்க் கூறினார். இந்தப் போட்டிக்காக இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் ஒப்புதலும் சம முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் தொடரின் முதல் போட்டியை இந்தியாவில் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் போட்டி சென்னையில் நடைபெறும்.