AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Big Bash League: இந்தியாவில் பிக் பாஷ் லீக்கின் முதல் போட்டி எப்போது? எங்கு நடைபெறுகிறது?

Big Bash League in India: இந்தியாவில் பிக் பாஷ் லீக்கின் முதல் போட்டி 2026ம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி, சேப்பாக்கம் ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படும் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்தியாவில் நடைபெறும் இந்த பிபிஎல்-இன் முதல் போட்டியில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Big Bash League: இந்தியாவில் பிக் பாஷ் லீக்கின் முதல் போட்டி எப்போது? எங்கு நடைபெறுகிறது?
பிக் பாஷ் லீக்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Jul 2026 16:24 PM IST

ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் (BPL 2026) சரித்திரம் படைக்கத் தயாராக உள்ளது. நேற்று அதாவது 2026 ஜூலை 10ம் தேதி ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், 2026-27 பிக் பாஷ் சீசனின் முதல் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) முன்னிலையில் ஆஸ்திரேலியப் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பிபிஎல் இந்தியாவிற்கு வந்து ஒரு புதிய வரலாற்றைப் படைக்கிறது. எந்தவொரு விளையாட்டு லீக்கிற்கும், இந்தியாவில் போட்டிகளை நடத்துவது மிகப்பெரிய அளவிலான மக்களைச் சென்றடைவதையும், பார்வையாளர்களை ஈர்ப்பதையும் உறுதி செய்கிறது என்று பிரதமர் மோடியும் கூறினார். பிபிஎல் வரலாறு படைப்பதற்கு முன்பு, பிக் பாஷ் லீக் இந்தியாவில் எப்போது, ​​எங்கே அறிமுகமாகும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ: இனி ஆஸ்திரேலியாவில் ஐபிஎல் போட்டிகள்? வெளியான முக்கிய தகவல்

இந்தியாவில் பிக் பாஷ் லீக் எப்போது, ​​எங்கே அறிமுகமாகிறது?


இந்தியாவில் பிக் பாஷ் லீக்கின் முதல் போட்டி 2026ம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி, சேப்பாக்கம் ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படும் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்தியாவில் நடைபெறும் இந்த பிபிஎல்-இன் முதல் போட்டியில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

வரலாற்றில் முதன்முறையாக, ஆஸ்திரேலியாவிற்கு வெளியே ஒரு பிக் பாஷ் லீக் போட்டி நடைபெற உள்ளது. பிக் பாஷ் லீக்கிற்கு புதிய பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக, ஆஸ்திரேலியாவிற்கு வெளியே போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருவதாக, பிக் பாஷ் லீக்கின் நிர்வாகப் பொது மேலாளர் அலிஸ்டர் டாப்சன் தெரிவித்தார்.

ALSO READ: டி20யில் வெற்றிக்காக போராடும் இந்திய அணி.. ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெறுமா?

2011ல் தொடங்கப்பட்ட பிக் பாஷ் லீக்:

ஆஸ்திரேலியா 2011-ல் பிக் பாஷ் லீக்கைத் தொடங்கியது. இதுவரை 15 சீசன்கள் விளையாடப்பட்டுள்ளன. பிபிஎல்-ல் மிகவும் வெற்றிகரமான அணியான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், 6 முறை கோப்பையை வென்று தற்போதைய சாம்பியனாக உள்ளது. பிபிஎல் 2025-26 இறுதிப் போட்டியில், ஸ்கார்ச்சர்ஸ் அணி சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 6வது முறையாக கோப்பையை வென்றது.

பெர்த்தைத் தவிர, சிட்னி சிக்ஸர்ஸ் (3) மற்றும் பிரிஸ்பேன் ஹீட் (2) ஆகிய அணிகள் மட்டுமே பிக் பாஷ் லீக் பட்டத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வென்றுள்ளன.

Follow Us