AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய் பிறந்தநாள்.. வண்டலூர் உயிரியல் பூங்கா உட்பட 3 பூங்காவில் மக்களுக்கு 2 நாள் இலவச அனுமதி.. எப்போது?

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவிற்கு இந்த இலவச அனுமதி வழங்கப்படாதது குறித்து விளக்கமளித்த அவர், காந்தி மண்டப வளாகத்தின் ஒரு பகுதியாக உள்ள அந்தப் பூங்காவில் வார இறுதி நாட்களில் இலவச அனுமதி வழங்கினால் அதிக கூட்டம் கூடும் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். 

முதல்வர் விஜய் பிறந்தநாள்.. வண்டலூர் உயிரியல் பூங்கா உட்பட 3 பூங்காவில் மக்களுக்கு 2 நாள் இலவச அனுமதி.. எப்போது?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Jun 2026 08:49 AM IST

ஜூன் 18, 2026: தமிழ்நாடு முதல்வர் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, வரக்கூடிய ஜூன் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட மூன்று பூங்காக்களுக்கு இலவச நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் குடும்பத்தினருடன் முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

3 உயிரியல் பூங்காக்களில் அனுமதி இலவசம்:

அப்போது, முதல்வர் விஜயின் 52வது பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்தார். இதையொட்டி, ஜூன் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா, வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி உயிரியல் பூங்கா மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள குறும்பப்பட்டி உயிரியல் பூங்கா ஆகிய இடங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நுழைவுக் கட்டணம் இன்றி பார்வையிடலாம் என கூறினார்.

மேலும் படிக்க: த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம்.. ஆளுநர் உரை முதல் எதிர்க்கட்சிகளின் அனல் பறக்கும் கேள்விகள் வரை.. நடக்கப்போவது என்ன?

அதற்கான அனுமதிச் சீட்டுகளை வழக்கம்போல் ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இதற்கான கட்டணத் தொகை பால்முனி நாயக்கர் குடும்ப அறக்கட்டளை மூலம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இரண்டு நாட்களுக்கான செலவு ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

“குழந்தைகள்தான் எங்கள் தெய்வங்கள். எங்களுக்கு வெற்றி கிடைப்பதற்கு குழந்தைகள் முக்கிய காரணம். அவர்களின் மகிழ்ச்சிக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: “அவங்க 2 பேரும் மதிமுக எம்எல்ஏக்களே இல்ல”.. பரபரப்பை கிளப்பிய துரை வைகோ!!

கிண்டி சிறுவர் பூங்காவிற்கு அனுமதி வழங்கப்படாதது ஏன்?

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவிற்கு இந்த இலவச அனுமதி வழங்கப்படாதது குறித்து விளக்கமளித்த அவர், காந்தி மண்டப வளாகத்தின் ஒரு பகுதியாக உள்ள அந்தப் பூங்காவில் வார இறுதி நாட்களில் இலவச அனுமதி வழங்கினால் அதிக கூட்டம் கூடும் என்பதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். மேலும், முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us