நெல்லை மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிரடியாக களமிறங்கிய சிங்கப்பெண்கள் படை!
Singapengal Special Task Force : திருநெல்வேலியில் வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஒருவரை சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப் படை போலீசார் அதிரடியாக கைது செய்து பாளையங் கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .
திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு அவரது உறவினர் பெண் ஒருவர் உதவியாக இருந்து வந்தார். அப்போது, மருத்துவமனையில் இருந்த அந்த பெண்ணிடம் ஒரு நபர் தவறான வகையில் நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்ணுக்கு, அந்த நபர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தலின்பேரில், நெல்லை மாநகர சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு பாலியல் தொந்தரவுக்கு உள்ளான பெண் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில், சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்றது.
பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது
அங்கு, அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தென்காசி மாவட்டம், ஆண்டிப்பட்டியை சேர்ந்த பாஸ்கர் ( 49 வயது) என்பவரை கைது செய்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பாளையங்கோட்டை போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். இது, மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததை அந்த நபர் ஒத்துக் கொண்டார். இதை தொடர்ந்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் படிக்க: மாணவர்களே நோட் பண்ணுங்க.. இந்தாண்டு எத்தனை நாள்கள் லீவு.. அடுத்த சம்மர் லீவு அப்டேட்!




நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த அதிரடி சம்பவத்தால் அந்த மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், கட்டுப்படுத்தும் வகையிலும் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை அண்மையில் முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்திருந்தார். அதன்படி, இந்த படையின் முதல் வழக்கு பதிவு சென்னை மாவட்டத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பதிவு செய்யப்பட்டது.
தனியார் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு
இதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் பெண்களுக்கு தொந்தரவு அளித்ததாக பலரை இந்த படை கைது செய்தது. இவ்வாறாக சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை அதிரடியாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது நெல்லை மாவட்டத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஒருவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சென்னையில் நெஞ்சை உலுக்கிய கொடூரம்.. மகளை கொன்று தந்தை தற்கொலை.. மனைவிக்கு லைவ் வீடியோ!