AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

4 தொகுதிகள் இடைத்தேர்தல்.. தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.. சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு!

தொடர்ந்து, சட்டமன்றச் செயலாளர் தரப்பில், அரசின் மூத்த தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி, "சபாநாயகரின் தன்னிச்சையான நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. விதிகள் முறைப்படி பின்பற்றப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

4 தொகுதிகள் இடைத்தேர்தல்.. தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.. சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு!
மாதிரிப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Jun 2026 13:43 PM IST

சென்னை, ஜுன் 14: தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் மற்றும் சட்டமன்றச் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த மே மாதம் தமிழகத்தில் ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ (தவெக) தலைமையில் புதிய அரசு அமைந்தது. அப்போது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார்.

இதையும் படிக்க: ‘நகையே இல்லாமல் அடகு’.. கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கில் நடந்த மோசடி.. பகீர் தகவல்!!

இந்தச் சூழ்நிலையில், மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் உள்ளிட்ட 4 தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிகாரப்பூர்வமாக தவெக-வில் இணைந்தனர் . இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

அதிமுக மற்றும் மக்கள் கட்சி மனு:

சபாநாயகரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அந்த 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் மக்கள் கட்சி சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

நீதிமன்றத்தில் காரசார வாதம்:

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக தரப்பில், “எம்.எல்.ஏ-க்கள் மதியம் 2.30 மணிக்கு ராஜினாமா கடிதம் ஓடுத்தனர். சபாநாயகர் எந்தவித விசாரணையும் நடத்தாமல், அடுத்த ஒரு மணி நேரத்தில் (3.30 மணிக்கு) அதனை ஏற்றுக்கொண்டு அரசாணை வெளியிட்டுள்ளார். அரசுக்கு ஆதரவாக வாக்களித்த இவர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாகக் கூறி இந்த ராஜினாமா நாடகம் நடத்தப்பட்டுள்ளது. சபாநாயகரின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது, இதில் சந்தேகம் உள்ளதால் நீதிமன்றம் இதை ஆய்வு செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

தொடர்ந்து, சட்டமன்றச் செயலாளர் தரப்பில், அரசின் மூத்த தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி, “சபாநாயகரின் தன்னிச்சையான நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. விதிகள் முறைப்படி பின்பற்றப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது” என்று வாதிட்டார்.

இதையும் படிக்க: ஒரு காவலரே இப்படி செய்யலாமா? வைரல் புகைப்படத்தால் வந்த வினை.. நெல்லை எஸ்.பி. போட்ட அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சட்டமன்ற நடவடிக்கைகளில் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, 4 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும், இந்த மனுக்கள் தொடர்பாக சபாநாயகர் மற்றும் சட்டமன்றச் செயலாளர் ஆகியோர் உரிய பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Follow Us