AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்.. தவெகவில் இணைகிறார்?

Aiadmk Mla C Vijayabaskar Resigned : அதிமுகவை சேர்ந்த சி. விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார் .

அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்.. தவெகவில் இணைகிறார்?
சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ ராஜினாமா
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 Jun 2026 16:05 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில், எடப்பாடி பழனிசாமி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக எஸ். பி. வேலுமணி, சிவி சண்முகம் தரப்பு இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்தது. இதனிடையே, எஸ். பி. வேலுமணி தரப்பினர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி உடன் சமரசம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு ஐக்கியமாகினர். ஆனால், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி எம்எல்ஏவான சி. விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்த சி.விஜயபாஸ்கர்

இது தொடர்பான ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவையில் சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகரை நேரில் சந்தித்து அளித்தார். அவரும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக அதிமுகவில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 5- ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் 2026- ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 4 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் சி. விஜயபாஸ்கர் இருந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய முகமாகவும், அதிமுகவின் முக்கிய புள்ளியாகவும் சி. விஜயபாஸ்கர் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி – முதல்வர் விஜய் அறிவிப்பு

சி.விஜயபாஸ்கர் வெளியிட்ட ஆடியோ

இதனிடையே சி. விஜயபாஸ்கர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொகுதி மக்களின் பாதத்தை தொட்டு வணங்கி எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது ஆயுள் உள்ளவரை தொகுதி மக்களுக்கு சேவை செய்வேன். இது முடிவு அல்ல. தொடக்கம் தான். என்னை வாழ்த்த வேண்டும். எப்போதும் போல, இந்த விஜயபாஸ்கர் உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருப்பேன். எனது முடிவை ஏற்கனவே நான் அறிவித்துள்ளேன். எந்த முடிவும் மக்கள் முடிவு தான் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக தகவல்

ஏற்கனவே, சி. விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணை இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவர் வெளியிட்ட ஆடியோவில் இது முடிவு அல்ல தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் விரைவில் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: குதிரை பேரம்.. ஆதாரங்கள் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி..

Follow Us