AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி – முதல்வர் விஜய் அறிவிப்பு

CM Joseph Vijay : முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு, குறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.  அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி – முதல்வர் விஜய் அறிவிப்பு
முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 16 Jun 2026 12:42 PM IST

சென்னை, ஜூன் 16 : முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு, குறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய்யால் கடந்த 25.05.2026 தேதியில் ரூ.50,000 வரை பயிர்கடன் பெற்ற குறு. சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர் கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதிலுமிருந்து இவ்விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.

ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், தமிழ்நாடு முதல்வர் மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்ய உத்திரவிட்டதற்கிணங்க மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட 15.06.2026 அன்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை. நிதி. திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.

இதையும் படிக்க : காலி மது பாட்டில்களை திரும்பப் பெற தானியங்கி இயந்திரம் – சோதனை முறையில் அறிமுகம்

வெளியான அறிவிப்பு

 

இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின் படியும். தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர் கடன் பெற்ற 14.43 இலட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் எம்எல்ஏகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் – தொடங்கி வைக்கும் முதல்வர்

கடன் தொகையில் குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிக்கான தள்ளுபடி ரூ. 75,000 வரை தள்ளுபடி செய்யப்படவுள்ளது. மேலும் ரூ.75,000 க்கு மேல் 35,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75,000/-மும் குறைந்தபட்சமாக ரூ.35,000/-மும் பணப்பயன் கிடைக்கும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us