AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்.. 46 ஆயிரம் அட்டைகள் தயார்.. முதல்வர் விஜய் எடுக்கும் மூவ்!

New Ration Cards Distribute: தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 46 ஆயிரம் பேருக்கு ரேஷன் அட்டைகள் வழங்க தயார் நிலையில் இருப்பதாகவும், இதனை தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் விரைவில் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்.. 46 ஆயிரம் அட்டைகள் தயார்.. முதல்வர் விஜய் எடுக்கும் மூவ்!
புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் விநியோகம்
Baskar P
Baskar P | Updated On: 15 Jun 2026 14:40 PM IST

தமிழகத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்யும் வகையில் குடும்ப அட்டை சேவைகள் இணையதளம் மூலமாக எளிமை படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் முதல் சுமார் 2.25 ஆயிரம் புதிய ரேஷன் அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, அதில் தகுதியான நபர்களுக்கு விவரங்கள் சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை மற்றும் கள ஆய்வு பணிகளுக்கு பிறகு முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 46 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அட்டைகளை விநியோகம் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் உணவுப் பொருள் வளங்கள் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் விநியோகம்

இந்த குடும்ப அட்டைகள் பொதுமக்களுக்கு விநியோகிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தேதி மற்றும் இடம் தொடர்பான அறிவிப்பு விரைவில் அரசு சார்பில் வெளியிடப்பட உள்ளது. இதில், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த நபர்களின் முகவரி அல்லது சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அட்டைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. புதிதாக ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் ஒரே நேரத்தில் ரேஷன் அட்டைகளை வழங்காமல் படிப்படியாக ரேஷன் அட்டைகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க: இட்லி தட்டில் சிக்கிய விரல்.. வலியால் துடித்த சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!

46 ஆயிரம் புதிய ரேஷன் அட்டைகள் தயார்

அதன்படி, தற்போது முதல் கட்டமாக சுமார் 46 ஆயிரம் குடும்ப அட்டைகள் வினியோகம் செய்வதற்கு தயார் நிலையில் உள்ளன. இந்த ரேஷன் அட்டைகள் மீதான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி உள்ள நபர்கள் யாரும் விடுபடாத வகையில் படிப்படியாக அனைவருக்கும் புதிய குடும்ப அட்டைகள் கட்டாயம் வழங்கப்படும் என்று அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது, குடும்ப அட்டை விநியோக பட்டியலில் இடம் பெறாத விண்ணப்பதாரர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும், ஆவண சரிபார்ப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு குடும்ப அட்டைகள் அனுப்பி வைக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நலத்திட்ட உதவிகளை தடையின்றி பெறவேண்டும்

குடும்ப அட்டை என்பது வெறும் உணவு பொருள்கள் பெறுவதற்கான ஆவணம் மட்டும் இன்றி அரசு வழங்கும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை பெறுவதற்கான மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். எனவே, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விரைவாக குடும்ப அட்டைகளை வழங்கி, அவர்கள் நலத்திட்ட பயன்களை தடையின்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பிரியாணி கடையில் பயங்கர மோதல்.. வன்முறையை வேடிக்கை பார்த்த போலீஸார்.. சென்னையில் பகீர்!!

Follow Us