AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரியாணி கடையில் பயங்கர மோதல்.. வன்முறையை வேடிக்கை பார்த்த போலீஸார்.. சென்னையில் பகீர்!!

இந்தக் கலவரம் உச்சகட்டத்தை எட்டியிருந்த வேளையில், சிட்லபாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், வன்முறையைத் தடுத்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவலர்கள், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தது அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

பிரியாணி கடையில் பயங்கர மோதல்.. வன்முறையை வேடிக்கை பார்த்த போலீஸார்.. சென்னையில் பகீர்!!
மாதிரிப் புகைப்படம்
Baskar P
Baskar P | Updated On: 15 Jun 2026 14:23 PM IST

சென்னை, ஜுன் 15: சென்னை பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள போலீஸ் பூத் அருகே நேற்று மாலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர கைகலப்பு மற்றும் கல்வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வழக்கம்போல கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கு பிரியாணி வாங்கிய வாடிக்கையாளர்கள் சிலர், அந்த உணவை கடைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த ஒரு டபரா மீது வைத்துள்ளனர். இதைக் கவனித்த கடையின் உரிமையாளர், “வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் தயவுசெய்து அந்தப் பாத்திரத்தின் மீது பிரியாணியை வைக்காதீர்கள், உணவை எடுங்கள்” என்று கேட்டுள்ளார். இந்தச் சாதாரண கோரிக்கை இரு தரப்பிற்கும் இடையே பெரும் வாக்குவாதமாக மாறியது.

மேலும் படிக்க: கோவையில் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் – ஆசிரியர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது

போர்க்களமான சாலை – சரமாரி கல்வீச்சு:

நிமிடத்திற்கு நிமிடம் வாக்குவாதம் சூடுபிடித்த நிலையில், இரு தரப்பினரும் தங்களுக்கு ஆதரவாக தங்களது நண்பர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் மாறியது. இரு தரப்பும் சாலையோரத்தில் கிடந்த கற்களை எடுத்து ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். இந்த பயங்கர மோதலால் ரேடியல் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

“எங்க எல்லை இல்லை” – வேடிக்கை பார்த்த போலீஸார்:

இந்தக் கலவரம் உச்சகட்டத்தை எட்டியிருந்த வேளையில், சிட்லபாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால், வன்முறையைத் தடுத்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவலர்கள், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தது அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் காவலர்களிடம் கேள்வி எழுப்பியபோது, “இந்த இடம் எங்களுடைய காவல் நிலைய எல்லைக்குள் வராது. நாங்கள் ஏற்கனவே பல்லாவரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டோம். அவர்கள் வந்துதான் இதைக் கையாள வேண்டும்” என்று மிக அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர்.

பொதுமக்கள் கடும் கொந்தளிப்பு:

மக்கள் உயிரும் உடமையும் ஆபத்தில் இருக்கும் ஒரு இக்கட்டான சூழலில், எல்லைப் பிரச்சனையைக் காரணம் காட்டி காவல்துறையினர் கடமை தவறியது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரத் தாமதமானதால், அந்தப் பகுதியில் நீண்ட நேரம் பதற்றமான சூழல் நீடித்தது.

மேலும் படிக்க: “உள்ளூர் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது” பனை தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. மதுரை உயர்நீதிமன்றம்!

நேரடி வன்முறை கண் முன்னே நடந்தும், அதைத் தடுக்காமல் அலட்சியமாக இருந்த காவலர்கள் மீது உயர்மட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Follow Us