கோவையில் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம் – ஆசிரியர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது
கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாட்ஸ-அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பிய திண்டுக்கல்லைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரை கோவை கிழக்கு மகளிர் போலீசார் ஜூன் 12, 2026 இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்.
கோயம்பத்தூர், ஜூன் 12 : கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாட்ஸ-அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பிய திண்டுக்கல்லைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரை கோவை கிழக்கு மகளிர் போலீசார் ஜூன் 12, 2026 இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (34) என்ற நபர், கோவையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்து உள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாத கோடை விடுமுறை காலத்தின் போது, தனது வகுப்பில் படித்து வந்த மற்றும் தன்னுடன் நெருக்கமாக பழகி வந்த சில மாணவர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு இவர் தொடர்ச்சியாக ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
கோவையில் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச படம்
தற்செயலாக மாணவர்களின் செல்போன்களைச் சோதித்த பெற்றோர்கள், அதில் ஆசிரியர் பாபு அனுப்பி இருந்த ஆபாசப் பதிவுகளைப் பார்த்து அதிர்ச்சியிலும் வேதனையிலும் உறைந்து போயினர். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திரண்டு சென்று, சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையும் படிக்க : ராணிப்பேட்டையில் கோர விபத்து.. பைக் மீது கார் மோதல்.. 2 குழந்தைகள் உள்பட மூவர் பலி!




இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் பாபுவின் செல்போனை வாங்கி போலீசார் தீவிர தொழில்நுட்பப் பகுப்பாய்வு செய்த போது, அவர் மாணவர்களுக்கு ஆபாசப் படங்களை அனுப்பியது உறுதியானது. இதை அடுத்து, கோவை கிழக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ஆசிரியர் பாபு மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவரைச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க : கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்.. தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்.. பாய்ந்தது வழக்கு!
இதுகுறித்து போலீசார் தரப்பில் விசாரித்த போது, கோடை விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி, தன்னிடம் டியூஷன் மற்றும் வகுப்புகளில் நெருக்கமாக இருந்த மாணவர்களைக் குறிவைத்து இந்த ஆசிரியர் ஆபாசப் படங்களைப் பகிர்ந்து வந்து உள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் வெளிவந்து உள்ளது. மாணவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியரே இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்டு போக்சோ கைதியாக மாறி உள்ள இந்தச் சம்பவம் கோவையில் கல்வி வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.