AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“உள்ளூர் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது” பனை தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. மதுரை உயர்நீதிமன்றம்!

Palmyra Worker Shooting Case: தென்காசி மாவட்டத்தில் பனை தொழிலாளி மீது எஸ்ஐ இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளூர் போலீசார் விசாரணையில் நியாமிருக்காது என்பதன் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது.

“உள்ளூர் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது” பனை தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்.. மதுரை உயர்நீதிமன்றம்!
பனை தொழிலாளி துப்பாக்கி சூடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 13 Jun 2026 06:32 AM IST

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பனை தொழிலாளி மணிகண்டன் மீது ஆலங்குளம் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக மணிகண்டனின் தந்தை பெருமாள் சேட் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஆலங்குளம் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்ளிட்ட போலீசார் எனது மகனை பனந்தோப்புக்கு அழைத்துச் சென்று அங்கு கட்டப்பட்டிருந்த பானைகளில் பதநீர் உள்ளதா கல் உள்ளதா என சொல்லுமாறு கட்டாயப்படுத்தினர். இதில், எனது மகனுக்கும், போலீசாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், எனது மகன் மீது எஸ்ஐ இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டார். இந்த வழக்கை போலீசார் விசாரித்தால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. எனது, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

உள்ளூர் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி பி. புகழேந்தி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்களால் வெளியிடப்பட்ட சில அறிவியல் கட்டுரைகளில் கள்ளில் பல்வேறு நன்மைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில், கல் இறக்கியதாக கூறி மனுதாரரின் மகனை தீவிர குற்றவாளியாக கருதி எஸ்ஐ துப்பாக்கி சூடு நடத்தி காயப்படுத்தியுள்ளார். இந்த வழக்கில் பனைத் தொழிலாளியின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் எஸ் ஐ வரம்பு மீறி செயல்பட்டுள்ளார். இதனால், உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டால் நியாயம் கிடைக்காது.

மேலும் படிக்க: விழுப்புரத்தில் பேருந்தில் பயணியின் லேப்டாப் திருட முயற்சி.. தவெக நிர்வாகி அதிரடி கைது!

பனை தொழிலாளி துப்பாக்கி சூடு சிபிசிஐடிக்கு மாற்றம்

எனவே, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்படுகிறது. மேலும், மனுதாரர் மகனுக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், ஒழுங்குபடுத்தப்பட்ட உரிய அமைப்புகளின் கீழ் கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் கல் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. மதுவிலக்கு குற்றங்களை கண்டறிவதிலும், சட்ட விரோத மதுபானங்களை கைப்பற்றுவதிலும், வாகனங்களை பறிமுதல் செய்வதிலும் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

மாநில அரசின் கொள்கை முடிவு சார்ந்ததாகும்

மதுவிலக்கு குற்ற விவகாரத்தில் விரிவான கண்காணிப்பு சாத்தியம் என்றால், கள் விற்பனையை ஒழுங்கு படுத்துவதற்கும் இது போன்ற வழிமுறையை பின்பற்றலாம். இருந்தாலும், கல் மீதான தடையை தொடரலாமா அல்லது ஒழுங்குபடுத்த உரிமை கட்டமைப்பின் கீழ் விற்பனைக்கு அனுமதிக்கலாமா என்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வரும் கொள்கை முடிவு சார்ந்தது என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: பிஸ்கட் சாப்பிடுவதில் தம்பியுடன் தகராறு.. 15 வயது சிறுமியின் விபரீதமான முடிவு.. திண்டுக்கல்லில் சோகம்!

Follow Us