AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“50 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை”.. குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஆளுங்கட்சி நிர்வாகிகளே.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!!

தற்போதைய ஆட்சியில் குற்றம் செய்யும் ஆளுங்கட்சியினர் மட்டும்தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. தன் சொந்தக் கட்சித் தலைவரே முதலமைச்சராகப் பொறுப்பில் இருப்பது பற்றியோ, அல்லது அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இந்த குற்றவாளிகளுக்கு எந்தவிதமான பயமும் வராமல் இருப்பது ஏன்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

“50 பெண்களுக்கு நேர்ந்த கொடுமை”.. குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஆளுங்கட்சி நிர்வாகிகளே.. தவெக அரசை விளாசிய இபிஎஸ்!!
எடப்பாடி பழனிசாமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 15 Jun 2026 07:33 AM IST

சென்னை, ஜுன் 15: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்தே, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர், பல பெண்களைப் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க : “சீட்டுக்கட்டு போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது”.. இபிஎஸ் மீது சி.வி. சண்முகம் கடும் பாய்ச்சல்!

50-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்பு:

ஆளுங்கட்சியான தவெக நிர்வாகியால் மட்டுமே சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இதேபோன்று, சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் மீதும் பாலியல் வழக்குத் தொடரப்பட்டு அவர் தேடப்பட்டு வருகிறார். ஆனால், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன.”

“எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா?

“இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன ‘எல்லாரும் நல்லா இருப்போம்’ என்ற வாசகத்தின் அர்த்தம் இதுதானா? தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளாலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை நிலவும் போது, மக்கள் எப்படி நன்றாக இருக்க முடியும்? தற்போதைய ஆட்சியில் குற்றம் செய்யும் ஆளுங்கட்சியினர் மட்டும்தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. தன் சொந்தக் கட்சித் தலைவரே முதலமைச்சராகப் பொறுப்பில் இருப்பது பற்றியோ, அல்லது அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இந்த குற்றவாளிகளுக்கு எந்தவிதமான பயமும் வராமல் இருப்பது ஏன்?” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்:

பெண்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இந்த வழக்குகளில் எந்தவிதமான ஒளிவு மறைவோ அல்லது ஆளுங்கட்சியின் அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தற்போதைய “பொய்க்கால் குதிரை அரசை” வலியுறுத்துவதாக அவர்  திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : அதிமுகவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி.. கட்சியில் இருந்து விலகினார் நடிகை கௌதமி.. இபிஎஸ்-க்கு கடிதம்!!

அதிகரித்து வரும் குற்றச்செயல்கள்:

புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்தே, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இது போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தவெக நிர்வாகிகளின் இத்தகைய செயல்களுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, தவெக அரசுப் பொறுப்பேற்றது முதலே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Follow Us