தஞ்சை விமான நிலையத்திற்கு ஒப்புதல் – டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட தகவல்
திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள தகவலில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசால் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட 55 ஏக்கர் நிலத்தில் தஞ்சாவூர் விமான நிலைய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, ஜூன் 14 : தஞ்சாவூரில் அமையவுள்ள உள்நாட்டு விமான நிலைய பணிகள் தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜு ஜூன் 14, 2026 அன்று செய்தியாளர்களை சந்தித்த போது ரூ.100 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூரில் விமான நிலையம் அமையவுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள தகவலில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதல்-அமைச்சரும் தலைவருமான மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசால் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட 55 ஏக்கர் நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை விமான நிலையத்திற்கு ஒப்புதல்
திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜு ஜூன் 13, 2026 நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தஞ்சாவூரில் ரூ.100 கோடி மதிப்பில் விமான நிலையம் அமையவுள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், விமான நிலையத்திற்கான விரிவான திட்ட அறிக்கை நிர்வாக அனுமதிக்காகவும் நிதி ஒப்புதலுக்காகவும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே 55 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்துள்ளது என்றார்.




டி.ஆர்.பி.ராஜாவின் எக்ஸ் பதிவு
Finally!
The #ThanjavurAirport will soon become a reality! 🚀
AAI has cleared the terminal design for the new passenger terminal, link taxiway, and aircraft parking bays at Thanjavur Airport.
The project will be developed on the 55 acres handed over by Thalaivar then CM…
— Dr. T R B Rajaa (@TRBRajaa) June 14, 2026
இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட பதிவில், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய முதல்வர் திராவிட மாடல் அரசால் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட 55 ஏக்கர் நிலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு பாதுகாப்புத்துறை செயலர் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆகியோரை நாங்கள் சந்தித்த பிறகு, இத்திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதே மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விமான நிலையம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டதுடன் 4 வழி சாலைக்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற உதவினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2024, 2025 ஆம் ஆண்டுகளில் விமான போக்குவரத்து துறை அமைச்சருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினோம்.தஞ்சாவூர் பகுதியில் இருந்து பயணிக்கும் பயணிகள் குறித்து தரவுகளை சேகரிப்பதில் மேற்கொண்ட முயற்சிகளுக்கு திருச்சி விமான நிலைய இயக்குநருக்கு நன்றி. திமுகவின் உட்கட்டமைப்புக்கு அளித்து வரும் முயற்சிகள் தொடர்ந்து நல்ல பலன்களை அளிப்பதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.