பள்ளிகளில் சாதிக் கயிறு – அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய தகவல்
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிகளில் மாணவர்கள் சாதிக் கயிறு அணிவதை அனுமதிக்க முடியாது. நானே குங்குமம், விபூதியுடன் பள்ளிக்கு சென்றிருக்கிறேன். ஜாதி, கயிறு விவகாரத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும் என்றார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மதுரை, ஜூன் 14 : மதுரையில் காந்தி மியூசியத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிகளில் மாணவர்கள் சாதிக் கயிறு அணிவதை அனுமதிக்க முடியாது. நானே குங்குமம், விபூதியுடன் பள்ளிக்கு சென்றிருக்கிறேன். ஜாதி, கயிறு விவகாரத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும் என்றார். மேலும் பேசிய அவர் குற்றங்களின் தாய்மடியே போதைபொருட்கள்தான். ஒரு குழந்தைக்கு போதை பழக்கம் வந்துவிட்டால் வன்முறையை கையில் எடுக்கும் என்றார்.
‘முதல்வரின் ஆட்சியில் போதையில்லா தமிழகம்’
மேலும் பேசிய அவர் போதைப்பழக்கத்தை வேரோடு அழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1238 குற்றவாளிகளை தமிழக அரசு கைது செய்திருக்கிறது. போதையில்லா தமிழகம் என்பது எங்களின் இலக்கு. போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : அதிமுகவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி.. கட்சியில் இருந்து விலகினார் நடிகை கௌதமி.. இபிஎஸ்-க்கு கடிதம்!!




முதல்வர் விஜய்யின் ஆட்சியில் போதையில்லா தமிழகம் உருவாகும். போதை கலாச்சாரம் வேரோடு அழிக்கப்படும் பள்ளிக் கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்புவோம். ஆசிரியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மாணவர்களை எப்படி அணுகுவது என்பது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
எங்களுடைய தலைமை மக்கள் மட்டும் தான் தலைவர் மட்டும் தான். நாங்கள் 28 வருடமாக யாருக்காகவும் புகழாரம் பாடவில்லை. முதல்வர் விஜய் மக்களுக்குகாக தான் புகழாரம் பாடினார் என்றார்.
மேலும் பேசிய அவர், மதுரையில் ஜூன் 14, 2026 இன்று மாலை தொடங்கப்ட உள்ள அரசு பொருட்காட்சி சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது திருவிழாக்களுக்கு புகழ்பெற்ற மதுரையில் அரசு பொருட்காட்சியும் வெற்றிகரமான திருவிழாவாக அமையும். மாணவர்களுக்கு சலுகை கட்டணத்தில் நுழைவு சீட்டு வழஹங்கப்படவுள்ளது. என்றார்.
இதையும் படிக்க : “சீட்டுக்கட்டு போல அதிமுக சரிந்து கொண்டிருக்கிறது”.. இபிஎஸ் மீது சி.வி. சண்முகம் கடும் பாய்ச்சல்!
அரசு பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது?
அப்போது அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலர் பணியிடங்கள் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அண்மையில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.காலி பணியிடங்களை நிரப்ப விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மனநலன் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், உணவின் தரம் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.