மின்வாரியத்தில் கள உதவியாளர் பணிக்கான தேர்வு விதிகளில் மாற்றம் – தேர்வகர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 1,850 கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2025 நவம்பர் 16 அன்று நடைபெற்றது. இந்த நிலையில் உடல் தகுதித் தேர்வு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 14 : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 1,850 கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2025 நவம்பர் 16 அன்று நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உடல் தகுதித் தேர்வு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மின்வாரியத்தில் கள உதவியாளர் பணிக்கான தேர்வு விதிகளில் மாற்றம்
இது தொடர்பாக தற்போது வெளியான அறிவிப்பில் கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி உடல் தகுதி தேர்வில் மின் கம்பம் ஏறி இறங்கும் தேர்வுக்கு ஷூ பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “சீனாவுக்கு இணையாக ஏற்றுமதி செய்யப்படும்”.. புதிய பாலிசி குறித்து அமைச்சர் கீர்த்தனா!




இதற்கு முன்பாத மின் கம்பங்களில் வெறும் கால்களில் ஏறி இறங்க வேண்டும் என்ற விதி இருந்தது. தற்போது அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஷூ அணிந்து 30 அடி உயர மின் கம்பத்தில் 8 நிமிடங்களில் ஏற வேண்டும் என விதி திருத்தம் செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பணிகளில் சேர வேண்டும் என்பது பலரது கனவாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் காலியாக உள்ள 1,850 கள உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த நவம்பர் 16, 2026 அன்று நடைபெற்றது. இந்த நிலையில் உடல் துகுதித் தேர்வுக்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு வெறும் கால்களில் ஏற வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டிருப்பது தேர்வு எழுதியவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், தற்போது கோடைகாலம் என்பதால் இரவு நேரங்களில் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் மின் பகிர்மான அணைப்பில் சில தொழில்நுட்ப சவால்கள் ஏற்படுகின்றன. சென்னையில் 38 லட்சம் மின் நுகர்வோர் உள்ளனர்.
இதையும் படிக்க : “ஹெல்மெட் இல்லாத விபத்து மரணங்கள்”.. இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்.. மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை!
இவ்வளவு பெரிய நெட்வொர்க்கில் சில பகுதிகளில் மின் மாற்றிகள் துணை மின் நிலையங்கள் அதிக சுமைகள் ஏற்படுகின்றன. இதனால் ஃபியூஸ் பழுதடைதல், கேபிள் கோளாறுகள் மற்றும் பிற தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிக மின் தடை ஏற்படுகின்றன. பிரச்னைகளை உடனுக்குடன் கண்டறிந்து சரி செய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.