அரசு அதிரடி ஆக்சன்.. 48 சப்-கலெக்டர்களை கூண்டோடு மாற்றிய வருவாய்த்துறை!
Tamil Nadu Sub Collectors Transfer: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணி புரிந்து வரும் 48 சப்- கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் ஆகியோரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிரடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது.
தமிழகத்தில் 38 மாவட்டங்களில் பணி புரிந்து வந்த 25 சப் கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை, மண்டல மேலாளர்கள், மாவட்டம் மேலாளர்கள் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் கிழக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரேணுகா இதே மாவட்டத்தில் நில எடுப்பு துறை தகுதி வாய்ப்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தமிழ்மணி ஆர். டி. ஓ.வாக பணிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல நீலகிரி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தீப சித்ரா இதே மாவட்டத்தில் தனித்துறை ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துகிருஷ்ணன், மயிலாடுதுறை தனி துணை ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மாற்றம்
கோயம்புத்தூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஜோதி சங்கர் விழுப்புரம் நில எடுப்பு துணை தாசில்தார் ஆகவும், கோயம்புத்தூர் டாஸ்மாக் பொது மேலாளர் சீனிவாசன் இதே மாவட்டத்தில் மாவட்ட வளங்கள் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கும், சிவகங்கை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சுரேஷ் கண்ணன் மதுரை தனித்துறை ஆட்சியராகவும், சென்னை தெற்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பிரபு வெங்கடேசன் மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நல வாரியத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: “இந்தியா கூட்டணியை திமுக என்றும் ஆதரிக்கும்”.. நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி!




மதுரை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மாற்றம்
மதுரை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரமேஷ், சேலம் மண்டல மேலாளர் சிவில் சப்ளைக்கும், சென்னை சிறப்பு படை துணை ஆட்சியர் ஆனந்தி நெல்லை தனித்துறை ஆட்சியராகவும், திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜகோபால் கரூர் தனித்துறை ஆட்சியர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல, மேலும் பல சப்- கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த நிலையில், அரசு துறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்
அதில், ஒன்றாக அரசு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழகத்தில் 48 சப்- கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல, முதல்வரின் தனி செயலாளர்கள் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் என பல அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? அவருக்கே Confidence இல்லையா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி