கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா? அவருக்கே Confidence இல்லையா? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
MK Stalin Questions CM: திமுக மகளிரணி கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக ஆட்சி மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா? அதிமுக எம்எல்ஏகளை விலைக்கு வாங்குகிறார். பல மாநிலங்களில் பாஜக செய்தது போல தமிழகத்தில் விஜய் செய்து வருகிறார் என்றார்.
சென்னை, ஜூன் 13 : திமுக மகளிரணி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜூன் 13, 2026 இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நான் முதல்வராக இருக்கும்போது டெல்லி சென்றபோது அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிக்க போனார் என்று சொன்ன விஜய், இப்போது எதற்கு டெல்லி சென்றார்? கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவா என கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அவர், அதிமுக எம்எல்ஏகளை விலைக்கு வாங்குகிறார். தவெக ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா என கேள்வி எழுப்பினார்.
முதல்வர் விஜய் மீது திமுக தலைவர் விமர்சனம்
திமுக மகளிரணி கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக ஆட்சி மீது முதல்வருக்கே நம்பிக்கை இல்லையா? அதிமுக எம்எல்ஏகளை விலைக்கு வாங்குகிறார். பல மாநிலங்களில் பாஜக செய்தது போல தமிழகத்தில் விஜய் செய்து வருகிறார் என்றார்.




இதையும் படிக்க : “இந்தியா கூட்டணியை திமுக என்றும் ஆதரிக்கும்”.. நம்பிக்கை தெரிவித்த ராகுல் காந்தி!
மு.க.ஸ்டாலினின் சமூக வலைதள பதிவு
தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார்.
“Confident-ஆ இருங்க” என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ?
இதற்கிடையில், தொகுதிவாரியாக… pic.twitter.com/gEhvY7Tcsf
— M.K.Stalin (@mkstalin) June 13, 2026
எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக ஆளுங்கட்சியாக மாற இன்னும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். 6 மாதம் விமர்சனம் செய்யாமல் இருக்கும் அளவுக்கு இந்த ஆட்சி இருக்குமா என நான் பேசியிருந்தேன். அதை உண்மைக்கு மாறாக திரித்து, ஆட்சியை கவிழ்க்க சதியா என பேச ஆரம்பித்துவிட்டனர். பொறுப்பான எதிர்க்கட்சியாக திமுக இருக்கும்; ஆட்சியின் தோல்விகளை சுட்டிக்காட்டும். மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னையால் ஏன் தவெகவுக்கு வாக்களித்தோம் என மக்கள் நினைக்கின்றனர். இந்த ஆட்சியில் கொடூரமான குற்ற சம்பவங்கள்தான் செய்தியாக வந்து கொண்டிருக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தவெகவினர் காரணம். அவர்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்ற நிலை இருக்கிறது என்றார்.
இதையும் படிக்க : அதிமுக தேர்தல் தோல்வி, கட்சித் தாவல் நெருக்கடி.. ‘ஜெயலலிதா பாணியில்’ இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்!
மேலும் பேசிய அவர், தன் ஆட்சி மீதும், தனக்கு ஆதரவளித்துள்ள கட்சிகள் மீதும் நம்பிக்கையில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை Shopping செய்து, பா.ஜ.க.வின் Xerox Copyயாக முதலமைச்சர் செயல்படுகிறார். Confident-ஆ இருங்க” என முழங்கும் முதலமைச்சருக்கே Confidence இல்லையோ? இதற்கிடையில், தொகுதிவாரியாக அவரது கட்சி நிர்வாகிகள் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆட்சியமைத்த ஒரு மாதத்துக்குள் இந்தளவு Unpopular ஆன அரசை இப்போதுதான் தமிழ்நாடு பார்க்கிறது. தி.மு.க. பொறுப்பான, விழிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இந்த அலங்கோல ஆட்சி மக்களாலேயே வீழ்த்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.