பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை.. கோவையில் உற்சாக வரவேற்பு..
இன்று விமானம் மூலம் அண்ணாமலை கோவைக்கு வருகை புரிந்தார். கோவை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக “We The Leader” என்று முழக்கமிட்டு, பூங்கொத்துகள் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் ஆதரவாளர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சிலர் அவருடன் செல்பி எடுக்கவும் முயன்றனர்.
ஜூன் 13, 2026: அண்ணாமலை பாஜகவின் முன்னாள் மாநில தலைவராக இருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகிய பிறகு இன்று கோவைக்கு வருகை புரிந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜகவிலிருந்து விலகுவதாக அண்ணாமலை கட்சித் தலைமையிடம் கடிதம் வழங்கியிருந்தார். அவரது ராஜினாமா கடிதம் ஜூன் 5ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அதே நாளில் இணையவழி நிகழ்ச்சியில் பேசிய அவர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளதாக அறிவித்தார்.
அண்ணாமலைக்கு குவியும் ஆதரவு:
அவரது புதிய அரசியல் முயற்சிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் பலரும் “We The Leader” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும், அவர் அறிவித்த குறிப்பிட்ட நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் இணையவழி மூலம் அந்த இயக்கத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சென்னையில் தொடர் மின்வெட்டு ஏன்? 3 முக்கியக் காரணங்களை வெளியிட்டது மின்வாரியம்!
பாஜகவில் இருந்த சில நிர்வாகிகள் மட்டுமல்லாமல், பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து அவரது புதிய கட்சியில் இணைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவைக்கு வருகை தந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு:
இந்நிலையில், இன்று விமானம் மூலம் அண்ணாமலை கோவைக்கு வருகை புரிந்தார். கோவை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் படிக்க: பாஜகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் விஜயதரணி.. அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குறிப்பாக “We The Leader” என்று முழக்கமிட்டு, பூங்கொத்துகள் வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் ஆதரவாளர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். சிலர் அவருடன் செல்பி எடுக்கவும் முயன்றனர். விமான நிலையம் முழுவதும் அவரது ஆதரவாளர்களின் முழக்கங்கள் ஒலித்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
அனைவரது வரவேற்பையும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட அண்ணாமலை , பின்னர் தனது இல்லத்திற்குப் புறப்பட்டார். அவரை காண பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் விமான நிலையத்திற்கு திரண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.