சட்டமன்றத்தில் எப்படி நடந்துகொள்வது? எம்எல்ஏகளுக்கு 2 நாள் பயிற்சி அறிவித்த சபாநாயகர்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் எப்படி பேச வேண்டும், என்ன பேட வேண்டும்? எப்போது கேள்வி எழுப்ப வேண்டும் என்பது குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். 2 நாட்கள் நடைபெறும் இந்த புத்தாக்க பயிற்சியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.
சென்னை, ஜூன் 12 : தமிழ்நாடு சட்டமன்றத்தில் எப்படி பேச வேண்டும், என்ன பேட வேண்டும்? எப்போது கேள்வி எழுப்ப வேண்டும் என்பது குறித்து உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஜூன் 12, 2026 இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், 17வது சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் 2 நாட்கள் பயிற்சி அளிக்கவுள்ளதாக அறிவித்தார்.
எம்எல்ஏகளுக்கு 2 நாள் பயிற்சி அறிவித்த சபாநாயகர்
மேலும் பேசிய அவர், இதுதொடர்பாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வரும் ஜூன் 16 மற்றும் 17, 2026 ஆகிய 2 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தாக்க பயிற்சி நடைபெறவுள்ளது என அறிவித்தார்.
இதையும் படிக்க : 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது? அரசு தேர்தவுத்துறை இயக்குநர் தகவல்




தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் இந்த பயிற்சியை துவக்கி வைக்கிறார். இந்த பயிற்சியின்போது சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், சட்டமன்ற விதிகள், குறித்து பேரவை செயலாளர், துறை சார்ந்த செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற நடைமுறைகளை பற்றி நன்கு அறிந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.
மேலும் சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும், எதை பேசக்கூடாது, பேரவையில் எப்போது கேள்வி எழுப்ப வேண்டும், எப்படிப்பட்ட கேள்வி எழுப்ப வேண்டும் என்பது பற்றி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சட்டமன்ற பேரவைகளின் விதிகளுக்கு உட்பட்ட ஒரு சபையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய முழு விவரங்கள் இந்த புத்தாக்கப் பயிற்சியில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது என்றார்.
‘மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளலாம்’
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பெரிதும் உதவும் இந்த பயிற்சியில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், அனைத்து கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ளலாம் என்றார்.
இதையும் படிக்க : “திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது ‘சோபா மாடல்’ அரசு!”.. உதயநிதி சரமாரி விமர்சனம்!!
மேலும் பேசிய அவர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த விவதாரத்தில் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக கொறடா நியமிக்கும் பணிகள் ஆய்வில் உள்ளன. சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாத அதிமுக கொறடா யார் என அறிவிக்கப்பட்டும் என்றார். வழக்கமாக கடந்த காலங்களில் சட்டப்பேரவை செயல்பாடுகள் ஒளிபரப்பப்பட்டது. இந்த முறையும் கண்டிப்பாக நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். நீண்ட நேரம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடர் அனைத்தையும் ஒளிபரப்புவதா? என்பது தொடர்பாக முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.