“பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாட்களில் முடிவு”.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு!
பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், "பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் அனைத்தும் 5 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும். மனு அளித்த 15 நாட்களுக்குள்ளாகவே அதன் மீதான இறுதி முடிவுகள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
சென்னை, ஜுன் 12: தமிழக அரசுத் துறைகளின் பணிகள் பொதுமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், வருவாய்த்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் வணிகவரி – பத்திரப்பதிவுத் துறை ஆகிய மூன்று முக்கியத் துறைகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, மக்கள் விரும்பிய ஆட்சிக்கு பேரும் புகழும் சேர்க்கும் வகையில் ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்களது பணிகளை விரைந்து மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ‘தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’.. அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்!!
அரசின் புதிய கூட்டு நடவடிக்கை:
அதன் ஒரு பகுதியாக, வருவாய், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரப்பதிவு ஆகிய மூன்று துறைகளும் இணைந்து எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. அதோடு, பத்திரப்பதிவு முடிந்த பிறகு மக்களுக்குப் பட்டா மாறுதல் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில், ‘தரவு உள்ளீடு’ முறையை முறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
விரைந்து வழங்க நடவடிக்கை:
பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், இந்த மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து பட்டா வழங்குதல், சான்றிதழ்கள் வழங்குதல், முதியோர் உதவித்தொகை, சமூக நலத் திட்டங்கள் ஆகிய பணிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு:
பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர், “பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் அனைத்தும் 5 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும். மனு அளித்த 15 நாட்களுக்குள்ளாகவே அதன் மீதான இறுதி முடிவுகள் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
இதையும் படிக்க: அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!
தென்மேற்கு பருவமழை குறித்து விளக்கம்:
தற்போது நிலவி வரும் தென்மேற்கு பருவமழை குறித்துப் பேசிய அவர், தற்போது மிதமான மழையே பெய்து வருவதாகவும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இன்னும் கூடுதல் மழை தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். எனினும், பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் சரியான முறையில் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.